மேற்கு வங்கத்தில் கட்சியினர் எதிர்ப்பால் வேட்பாளர்களை மாற்றிய பா.ஜ.க...

3 தொகுதிகளுக்கு புதிய நபர்களை பிடித்து வந்தது ...

 கொல்கத்தா, மார்ச். 27 மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதி களில், நான்கு கட்டங்களாக 283 வேட்பாளர் களின் பட்டியலை பாஜக வெளியிட்டு இருந்தது. இதில், 150 வேட்பாளர்கள், அடுத்த கட்சிகளிலிருந்து விலகி வந்தவர்கள் என்பதுடன், இவர்களில் சிலர்பாஜகவிலேயே இல்லாதவர்கள் என்பதால், சீட் கிடைக்காத நீண்ட நாள் உறுப் பினர்கள் கொதித்து எழுந்து விட்டனர்.

ஹூக்ளி, ஜல்பைகுரி, பழைய மால்டா, அரிஸ்சந்திரப்பூர், ஜகடால், தெற்கு நாடியா, ரானாகட், சக்டா மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட் டத்தின் பல பகுதிகளிலும் பாஜக அதிருப்தியாளர்கள் சொந்தக் கட்சி அலுவலகத் தையே அடித்து, நொறுக்கிச் சூறையாடினர். தீ வைப்பில் ஈடுபட்டனர்.காசிப்பூர் - பெல்க  ச்சியா, சவுரிங்கீ ஆகிய தொகு திகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த தருண் சகா, ஷிகா மித்ரா ஆகியோர், “யாரைக் கேட்டு எங்களை வேட்பாளர்களாக அறிவித் தீர்கள்?" என்று கொந்தளித்து விட்டனர்.

இவர்கள் திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தும், பாஜக அவர் களை வேட் பாளர்களாக அறிவித்து மோசடியை அரங்கேற்றியிருந் தது. இந் நிலையில், 5-ஆவது கட்ட வேட்பாளர்களை அறிவித்து ள்ள பாஜக, காசிப்பூர்- பெல் கச்சியா, சவுரிங்கீ தொகு திகளின் வேட்பாளர் களை மாற்றியிருப்பதுடன், அலிப்பூர்துவார் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்த மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அசோக்லாகிரியை, பாலுர்காட் தொகுதிக்கு தூக்கியடித்துள் ளது. ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சுப்ரதா சகாவை, கொல்கத்தாவின் ராச்பீகாரி தொகுதியில் நிறுத்தி யுள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image