பா.ஜ.க.வை தமிழகத்தில் வரவிடாமல் தடுக்க வேண்டும்!

 சித்தராமய்யா தேர்தல் பரப்புரை

ஒசூர், மார்ச் 28 ஒசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கருநாடகா மாநில மேனாள் முதல மைச்சர் சித்தராமய்யா நேற்று (27.3.2021)  தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தளி, தேன்கனிகோட்டை பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்த அவர் ஒசூரில் டி.வி.எஸ். நகரில் திமுக வேட்பாளர் ஒய்.பிரகாசை  ஆதரித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய சித்தராமய்யா,

திமுகவின் முதல் முதல்வராக தமிழகத்தில் அண்ணா இருந்தார். அதன் பின்னர் கலைஞர் பல வரு டங்களாக முதல்வராக இருந்துள் ளார். தமிழகம் பல்வேறு துறை களில் வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அது திமுகவால்தான் குறிப்பாக கலைஞரால்தான். பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது பாஜக மேற்கு மாநிலங்களில் இல்லை. கருநாடகா வில்கூட பாஜக இல்லை ஆனால் அது தேர்தலில் நேர்மையாக வரவில்லை, வெற்றிபெறவில்லை. பின்பக்கமாக வந்து கோடானு கோடி செலவு செய்து ஆட்சி அமைத்துள்ளனர்.

பாஜகவை தமிழகத்தில் வரவிடாமல் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு கோடானுகோடி வணக்கங்கள் செலுத்தி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் பாஜகவை வளரவிடக்கூடாது. பாஜக தற் போது அதிமுகவின் தோளில் உட்கார்ந்து வளர இருக்கிறது. இங்கு அதிமுகவிற்கு வாக்களித் தால் அது பிஜேபிக்கு வாக்களித் ததாக இருக்கும். பாஜக கொள்கை இல்லாத கட்சி ஜாதி பெயரில் அரசியல் செய்கிறார்கள். அனை வரும் ஒருதாய் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் திமுக கூட்டணியின் கொள்கையாகும். 

காங்கிரஸ் அரசு கருநாடகாவில் நிலம் வழங்கினோம். அதை எல்லாம் பறித்து விட்டார்கள். இதனால் தமிழகத்தில் பாஜகவை வளர விடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கருநாடக மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே. சிவகுமார், ராமலிங்கம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், நாடாளு மன்ற காங்கிரஸ் உறுப்பினர் செல்லகுமார்,  மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், ஒசூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் எஸ்..சத்தியா மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image