செய்தியும், சிந்தனையும்....!

கயிறு விடலாமே!

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

வானத்தை வில்லாக வளைப்போம் - மண்ணைக் கயிறாகத் திரிப்போம்  என்றெல்லாம் ''கயிறு விட'' வேண்டியதுதானே!

ஞானோதயம்!'

அதானி துறைமுகத் திட்டத்தை ஆதரிக்க மாட்டோம்! - .பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

தேர்தல் நெருங்க நெருங்க இந்தஞானோதயமா?'

எங்கே தேடுவோம்?

தொகுதிக்குள் முடங்கினர் பா... தலைவர்கள்.

தேர்தல் முடிவுக்குப் பின் எங்கே இருப்பார்கள் என்று தெரியாதே!

ஜனமா? பணமா?

.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடியில் - திருமண மண்டபத்தில் பணப் பட்டுவாடா - முற்றுகைப் போராட்டம்.

கையில் காசில்லாதவன் 'கடவுளானாலும் கதவை சாத்தடி' என்ற பாட்டுதான் நினைவுக்கு வந்து தொலைகிறது.

ஆம் என்க!

கரோனா பரவல் கட்டுக்குள் வராததால் கிராம சபைக் கூட்டம் நடத்துவது சாத்தியமில்லை; உயர்நீதிமன்றத்தில் .தி.மு.. அரசு விளக்கம்.

ஆமாம், தேர்தல் பிரச்சாரத்தில் ஊர்வலங்கள் மட்டும் நடத்தலாம் - கரோனா அப்பொழுது மட்டும் விட்டுக் கொடுக்கும் அப்படித்தானே!

ரவுடிகளின் கூடாரம்?

சென்னையில் பா... பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது.

கட்சியில் ரவுடிகளை சேர்த்தால் இப்படித்தான்.

ஆமாம், அவர்களேதான்!

பெண்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலை அமைய .தி.மு.. கூட்டணிக்கு வாக்களியுங்கள் : - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

ஆமாம், 23 அமைச்சர்கள்மீது ஊழல் பட்டியலை இவர்கள்தானே கொடுத்தார்கள்.

அன்று சொன்னது என்னாச்சு அண்ணாச்சி?

ஓராண்டுக்குள் சுங்கச் சாவடிகள் - ஜி.பி.எஸ். முறையில் கட்டணம் வசூலிக்க முடிவு : - மத்திய அமைச்சர் நிதின்கட்காரி.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுங்கச் சாவடிகள் - வரி வசூல் நிறுத்தப்படும் என்று சொன்ன வாக்குறுதி என்னாச்சு?

பேசுவது குஜராத் கதாநாயகரா?

மாவோயிஸ்டு வன்முறைக்கு மம்தா ஆதரவு : - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

1992 குஜராத் கலவரம் நினைவிற்கு வருகிறது.

வெறுங்கை

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், வீடு, நிலம் இல்லாதோருக்குக் கான்கிரீட் வீடு.

- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி

வெறுங்கை முழம் போடாது.  

மேகதாது என்னாச்சு?

தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நாட்டியது அதிமுக அரசுதான்.

- . பன்னீர்செல்வம்

துணை முதல் அமைச்சர்

கருநாடகா கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாதுவும் இதில் சேருமோ?

வார்த்தை ஜாலம்

'நீட்' தேர்வுக்குப் பதில் 'சீட்' தேர்வு

- மக்கள் நீதி மய்யம் (கமலகாசன்) தேர்தல் அறிக்கை 

சாவு என்றாலும் மரணம் என்றாலும் ஒன்றேதான்! பா...வின் 'பி' டீம் என்று சொல்லப்பட்ட அரசல் - புரசல் சந்தேகமும் தீர்ந்தே விட்டது!

அடிச்சிப் பாருங்க அப்ப தெரியும்

அமமுகவைப்பற்றிக் கேட்டால் அடிப்பேன்.

- அமைச்சர் ராசேந்திர பாலாஜி

சொல்லாதிங்க செய்யுங்கள் - அப்பத் தெரியும்.

அவமரியாதை எதிர்ப்பு!

தமிழர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்கான தேர்தல்.

- தளபதி மு.. ஸ்டாலின்

மனுவாதிகளையும் துணைப் போகும் வாதிகளையும் எதிர்ப்பது கண்டிப்பாக சுயமரியாதை தான்.

ஓய்வெடுக்கலாமே!

 திமுக கூட்டணிக்கு ஓய்வூதியர் சங்கம் ஆதரவு. 

ஆளும் கட்சிக்கு ஓய்வு கொடுக்க சரியான முடிவு.

என்ன செய்ய உத்தேசம்?

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.215 கோடி பறிமுதல் 

 பறக்காமல் பதுங்கிப் பாயும் பண விநியோகம் நடக்கிறதே!

காரியம் ஆக வேண்டுமானால்

காலைப் பிடி!

விவசாயிகளின் காலில் விழுந்து வாக்குக் கேட்டார் அமைச்சர் உதயகுமார். 

காலை வாராமல் இருந்தால் சரி... 

வருணாசிரமவாதிகள் தானே!

நாடாளுமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர் மசோதா நிறைவேற்றம். 

ஜாதியைக் காப்பாற்றுவதில் பா...வுக்கு அவ்வளவு அக்கறை - ஆர்வம்!

இந்தியாவில் அல்ல!

ஜப்பானில் பணி நேரம் முடிவதற்கு

2 நிமிடம் முன்பு வீடு சென்ற 316 பணியாளர்களுக்கு ஊதியம் குறைப்பு. 

அதிசயம் - ஆனால் உண்மை.

பெண்ணால் முடியும்

இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே 28 கிலோ மீட்டர் தூரத்தை 48 வயது தெலுங்கானா ஆசிரியை நீந்தி - முதல் சாதனை.

'நான் என்ன வளையல் அணிந்துள்ளேனா?' என்று பேசும் ஆண்களின் வாய் அடங்கட்டும்!

Comments