தி.மு.க. வேட்பாளர் கே.பி.சங்கரை ஆதரித்து திருவொற்றியூர் மாவட்ட கழகம் சார்பில் தெருமுனைக்கூட்டம்

திருவொற்றியூர், மார்ச்31- திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மதச்சார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் அவர்களை ஆதரித்து வாக்கு கேட்டு தெரு முனை பிரச்சாரக் கூட்டம் 27.3.2021 அன்று திருவொற்றியூர் பீர் பயில்வான் தெருவில்   நடைபெற்றது. திருவொற்றியூர் பகுதி செயலாளர்  .ராசேந்திரன் தலைமையில் திருவொற்றியூர் பகுதி தலைவர் பெரு.இளங்கோ தொடக்க உரையாற்றினார். திருவொற்றியூர் மாவட்ட தலைவர்  வெ.மு.மோகன், திருவொற்றியூர் மாவட்ட செயலாளர் பா.பாலு முன்னிலையில் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்கு ரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில மகளிர் பாசறை செயலாளர்  வழக்குரைஞர் பா.மணி யம்மை சிறப்புரை ஆற்றினர்கூட்ட முடிவில் திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணி செய லாளர் இரா.சதீஷ் நன்றி கூறினார்.

Comments