கிருட்டினகிரி சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்

கிருட்டினகிரி, மார்ச் 16- கிருட்டி னகிரி மாவட்டம் கிருட்டின கிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டிநாயனப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவ புரத்திலுள்ள தந்தைபெரி யார் சிலைக்கு தீ வைத்து அவ மதிப்பு செய்ததைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் அனைத்துக் கட்சி நிர்வாகி கள் பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டம் கிருட்டின கிரி புதிய   பேருந்துநிலையம் அண்ணாசிலை எதிரில் 9.3.2021 செவ்வாய்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் .அறிவரசன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் கா.மாணிக் கம் அனைவரையும் வரவேற் றார்.  கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர்கள் ஒசூர் சு.வனவேந்தன், தருமபுரி

வீ. சிவாஜி, திருப்பத்தூர் கே.சி. எழிலரசன், மண்டலத் தலைவர் .தமிழ்ச்செல்வன்,  மாநில மாணவர் கழக துணை செயலாளர்கள் .யாழ்திலி பன், கே.சி..சிற்றரசு, தருமரி மண்டல மாணவர் கழகச் செயலாளர் மா.செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க வுரையாற்றினார்.     மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.ஜெயராமன், மாவட்ட தி.மு.. இலக்கிய அணி அமைப்பாளார் வெ.நாராயணமூர்த்தி, மாநில மக ளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, காங்கிரஸ்  ஆறுமுகசுப்பிரமணி, தி.மு.. அஸ்லாம்பாஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிட ராசா, மனிதேய மக்கள் கட்சி நூர்முகமது ஆகியோர் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்துப் பேசினர்.

கண்டன உரை

கண்டன உரையாற்றிய திராவிடர் கழகப் பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் அவர்கள் பேசியதாவது: தந்தை பெரியார் ஜாதி, மதம், அரசியலலுக்கு அப்பாற் பட்ட மாபெரும் சமூக சீர் திருத்த புரட்சியாளர்  அவரை ஒரு வட்டத்துக்குள் சுருக்க முடியாது.  பெரியார் இல்லை என்றால் நமக்கு கல்வி கிடைத்திருக்காது.  பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்பு மறுக் கப்பட்ட உரிமைகளை போராடி பெற்றுத் தந்தவர் மனிதநேயத்தின் மகத்தான தலைவர் தந்தை பெரியார். பாடப்புத்தகத்தில் இருந்த ஜாதிபாகுபாட்டை ஒழித்த வர் தந்தைபெரியார். அவர் மறைந்து 47 ஆண்டுகள் ஆகியும் அவரது கருத்துகளை கருத்தால் எதிர்கொள்ள முடியாத எதிரிகள் கோழைத் தனமாக அவரது சிலைமீது இரவு நேரங்களில் அவமதிப்பு செய்துவருகின்றனர்.

பெரியார் சிலையை அவ மதிக்க மூல காரணமாக இருக் கின்றவர்களை காவல்துறை கண்டறிந்து உண்மை குற்ற வாளிகளுக்கு தக்க தண்ட னையை வழங்கவேண்டும். தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு எடுபிடி அரசாக செயல்பட்டு வருகின்றது. ஜாதிவெறி, மதவெறி, பதவி வெறிகளுக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். திராவிடம் வெல்லும் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டா லின் அவர்கள் மே-2இல் முத லமைச்சர் ஆவது உறுதி. ஜாதி, மதவெறிகளுக்கு முடிவு கட்டப்படும் என்று கண்டன உரையாற்றினார்.

கூட்டத்தில் மாநில பகுத் தறிவாளர் கழகத்துணைத் தலைவர் அண்ணா.சரவ ணன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூர்பாண்டியன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பி னர்கள் கோ.திராவிடமணி, .ஜான்சிராணி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ, திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலா ளர் எம்.கே.எஸ்.இளங்கோ வன், மாவட்டத் துணைத் தலைவர் அரங்க.இரவி, கோ.தங்கராசன், .மாது, கி.வேலன், லூயிசுராசு, .கோ.ராசா, சா.ஜோதிமணி, இல.ஆறு முகம், வெ.புகழேந்தி, செ.. மூர்த்தி, சி.ராஜா, சி.சீனிவா சன், பெ.செல்வம், சிவ.மனோ கர், நா.சதீஷ்குமார், .பிர தாப், .வெங்கடாசலம், .சிவமணி, பையூர் சி.இராசா,       பூ.இராசேந்திரபாபு, .நாக ராஜன், .கிருஷ்ணவேல், .கிருட்டின், இரா.இராம் சந்தர், .வெங்கடேசன், இரா.பழனி,கி.முருகேசன், வி.திருமாறன், இரா.பழனி,செ.பொன்முடி, செ.சிவராஜ், கா.ஞானசேகரன், சா.தனஞ்செயன், மு. உண்ணாமலை, மு.செயரட்சகன், மு. சிலம்ப ரசன், ஓசூர் சி.மணி, சிறீதர், தருமபுரி கரு.பாலன், பரம சிவம், சி.காமராஜ், .சின்ன ராஜ், பீம். தமிழ்பிரபாகரன், இரா.இராசா, .சுதமணி, பெரியார் பெருந்தொண்டர்  குயில்தாசன் மற்றும் தருமபுரி, கிருட்டினகிரி, ஓசூர், திருப் பத்தூர் மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் பெரும்திரளாக கலந்துகொண்டு சிறப்பித் தனர்.

குறிப்பு: நன்றியுரைக்கு முன்பாக கூட்டத்தில் கலந்து கொண்டஅனைவரும் எழுந்து நின்று குற்றவாளியை கைதுசெய் கைதுசெய் என்று கண்டன முழக்கங்கைளை எழுப்பினர். இறுதியாக தரு மபுரி மண்டல இளைஞரணி செயலாளர் .ஆறுமுகம் நன்றி கூறினார்.

Comments