மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பா?

மகா நதி - கோதாவரி - கிருஷ்ணா - காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

- 2016 அஇஅதிமுக தேர்தல் அறிக்கை (பக்கம் 4)

கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை துரிதமாக செயல்படுத்திட விரைவு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் காவிரி வற்றாத ஜீவ நதியாகும்.

- 2021 அஇஅதிமுக தேர்தல் அறிக்கை (பக்கம் 67)

2016ஆம் ஆண்டு தேர்தலில் சொன்னதை நிறைவேற்றியதா அஇஅதிமுக அரசு? இப்பொழுது அதே வாக்குறுதியை (2021லும்) மீண்டும் வெளியிட்டுள்ளதே - யாரை ஏமாற்றிட? மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பா - எகத்தாளமா?

மக்களை ஏமாற்றும் இவர்களைத் தோற்கடிக்க வேண்டாமா?

Comments