தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில்

 விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 62ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு

சென்னை, மார்ச் 26 சைதாப் பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமைத்துள்ள 62ஆவது திருவள் ளுவர் சிலையைத் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கோ.பார்த்தசாரதி அவர்கள் தலைமையேற்று திறந்தார். இவ்விழாவிற்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம், தமிழ் வளர்ச்சித்துறை இயக் குநர் முனைவர் கோ.விசயராகவன், செம்மொழித் தமிழாய்வு இயக்குநர் முனைவர் இரா.சந்திரசேகரன், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தின் செயலாளர் முனைவர் சேயோன், நீதியரசர் டி. என். வள்ளிநாயகம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜிபி ராஜாதாஸ் ஆகி யோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் கூறுகையில் இதுவரை உலகமெல்லாம் பல்வேறு இடங்களில் 62 திருவள்ளுவர் சிலைகள் நிறுவி உள்ளோம். வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் மேலும் 60 திருவள் ளுவர் சிலைகள் நிறுவ உள்ளோம். மே மாதத்தில் டில்லியில் உள்ள 7 தமிழ்ப் பள்ளிகளிலும் 7 திருவள்ளுவர் சிலை கள் நிறுவவுள்ளோம். இவ்வாண்டு இறுதிக்குள் திருக்குறள் அதிகாரங்கள் 133அய் கருத்தில் கொண்டு, 133 திருவள்ளுவர் சிலைகள் நிறுவுவதே எங்கள் நோக்கம்.

இதன் மூலம் திருக்குறளின் பெருமையையும், தமிழ் மொழியையும் உலக மக்கள் யாவரும் அறிய பெருந் துணையாக இருக்கும் என தன் உரையில் கூறினார்.

Comments