தாராபுரத்தில் மழையிலும் விடா முயற்சியாக நடைபெற்ற "திராவிடம் வெல்லும்" பொதுக்கூட்டம்


 தாராபுரம், மார்ச் 13- தாராபுரம் கழக மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் "திராவிடம் வெல்லும்" எனும் தலைப்பில் 21.2.2021 ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணியளவில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் மழையிலும் விடா முயற்சியோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் கழக தலைவர் பா.கோவேந்தன் தலைமை தாங்கினார்.அமைப்பாளர் வெற்றிமாறன் வரவேற்றார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், மாவட்ட கழக தலைவர் .கிருஷ்ணன், துணைத் தலைவர் முத்து.முருகேசன், செயலாளர் .சண் முகம், அமைப்பாளர் கி.மயில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் தொடக்கத்தில் "பெரியார் பிஞ்சு" யாழ்மதிவதனி "கடவுள் மறுப்பு" கூறினார்.

கூட்டத்தில் கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வம் சிறப்புரை ஆற்றியதாவது,

மோடி ஆட்சி வெகுமக்களை நிர்வாண நிலைக்கு தள்ளியுள்ளது.மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யாமல் கார்ப்பரேட்டுகளின் கடன் கள் ஆயிரக்கணக்கான கோடிகள் வராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தனக்கு தெரியாது என்றும் டிவி யில் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறு கிறார்.தமிழகத்திலுள்ள  மருத்துவ கல்லூரிகள், மத்திய அரசு நிறுவனங் கள் ஆகியவற்றில் வடநாட்டினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வரு கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக விலைவாசி உயரும் அபா யகரமான சூழல் உருவாகியுள்ளது. 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது.

விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டத்திருத்த மசோதாக் களையும், சொந்த நாட்டு மக்களை அந்நியர்களாக சித்தரிக்கும் வகையில் சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங் களையும் மோடி அரசு கொண்டு வந் துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத் தில் திருவள்ளுவரை ஆரியத்தை ஏற் றுக்கொண்டவராக சித்தரிக்கப்பட்ட கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது.

இப்படியாக மக்கள் வாழ்வாதா ரமும், மாநில உரிமைகளும் பறி போகிக் கொண்டிருக்கிறது. தமிழ கத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு பதவி சுகத்திற்காக மோடி அர சின் பாதம் தாங்கி மாநில உரிமைகளை பறி கொடுத்து வருகிறது. மதவெறி கோரத்தாண்டவத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் ஒற்றுமையை சீர் குலைத்து ஆதாயம் தேடும் பிஜேபி யின் முயற்சிக்கு  எடப்பாடி பழனி சாமி  அரசு சிவப்பு கம்பள வரவேற் பளிக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் படித்தவர்கள் 1 சத விகிதத்திற்கும் குறைவு! ஆனால் இன்று அனைவரும் படித்துள்ளோம். இந்த மாற்றத்தை உருவாக்கியது "திராவிட இயக்கம்"

ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட் லருக்கு ரஷ்ய புரட்சியாளர் ஸ்டா லின் அன்று முடிவுரை எழுதினார். மதவாத மோடி அரசிற்கும், தமிழ்நாடு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கும் "தளபதி" மு..ஸ்டாலின் இறுதி முடிவு கட்டுவார்.

திராவிடர் ஆட்சியை நிறுவிட , இனநலன்,உரிமை,வாழ்வாதாரம் காக்கப்பட, அடிப்படை வாதத்திலி ருந்து விடுபட, இழிவு துடைக் கப்பட, சுதந்திர காற்றை சுவாசித்திட, வாக் குச் சீட்டை கையில் எடுக்கும்போது மக்கள் தீவிர முடிவை எடுக்கவேண் டும். அனைவரும் ஓரணியில் திரள்க! "திராவிடம் வெல்லும்" வணக்கம்!  இவ்வாறு அவர் உரை யாற்றினார்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வம், கழக அமைப் பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன். திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக வழக்குரைஞரணி அமைப்பாளர் .செல்வராஜ் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். தாராபுரம் நகர திமுக துணை செயலாளர் .சக்தி வேல் உடனிருந்தார்.

கழக தொழிலாளர் அணி மாநில செயலாளர் திருச்சி மு.சேகர், மாண வர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் நாத்திக சிதம்பரம், நகர கழக தலைவர் மு.சங்கர், செயலாளர் .மணி, கழக மகளிர் பாசறை மாவட்டத் தலைவர் சி.இராதா, தாராபுரம் நகர பகுத்தறி வாளர் கழகத் தலைவர் சு.திராவிடன், அமைப்பாளர் பெரியார் நேசன், கழக தொழிலாளரணி மாவட்ட தலைவர் .நடராசு உள்ளிட்ட கழகத்தின் அனைத்து அணியினரும் திரளாக பங்கேற்றனர். நிகழ்வின் நிறைவாக தாராபுரம் நகர கழக இளைஞரணி பொறுப்பாளர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Comments