ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி

 அமராவதி, மார்ச் 15- ஆந்திரா வில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடத்தப் பட்டது. 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இதில் ஒரு மாநகராட்சிக்கு பதிவான வாக்குகளை தவிர மற்ற 11 மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் நேற்று (14.3.2021) எண்ணப்பட்டன.இதில் தொடக்கத்திலிருந்தே அனைத்து மாநகராட்சிகளி லும் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியே முன்னி லையில் இருந்தது.

இதே நிலை கடைசிவரை தொடர்ந்து அனைத்து மாந கராட்சிகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றி சாதனை படைத்தது.இதைப் போல மொத்தமுள்ள 75 நகராட்சிகளில் 73அய் அந்த கட்சி கைப்பற்றியது. மீதமுள்ள 2 நகராட்சிகளில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சியில் அபார வெற்றி பெற்றதை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண் டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகின் றனர். மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்து வதை இந்த தேர்தல் வெற் றிகள் நிரூபிப்பதாக கட்சியின் எம்.எல்..வான அம்பத்தி ராம்பாபு தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி நகர்ப் புற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. அந்த கட்சி சமீபத்தில் நடந்த கிராமப்புற உள்ளாட்சியிலும் சோபிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Comments