அசையாத அதிமுக ஆட்சியும் அசைகிறது - அனுப்புவீர் வீட்டுக்கு!

தமிழ்நாடு அரசின் சிறப்புக் காவல்துறை தலைமை அதிகாரியாகப் (Special D.G.P.) பணிபுரியும் ஒரு உயர் அதிகாரியின் பாலியல் கொடுமை (டார்ச்சர்) தாங்க முடியாமல் சக பணிபுரியும் அய்.பி.எஸ்., அதிகாரியான மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகார் கொடுப்பதைத் தடுக்க, தன் கீழ் இருந்தவர்களை ஏவி விட்டு 'அட்டகாச தர்பார்' நடத்திய அதிகாரிமீதும்அவருக்கு உடந்தையாக சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை குறித்தும் சென்னை உயர்நீதிமன்றமே - நீதிபதி ஜஸ்டீஸ் ஆனந்த வெங்கடேஷ் அவர்களே - தாமே முன் வந்து வழக்கு  எடுத்து நடவடிக்கை எடுக்க வற்புறுத்திய சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்  நிலையில், அவ்வதிகாரியை  'சஸ்பெண்ட்' செய்யவோ சிறையில் அடைக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போதுதான் நாடே கொதித்து எழுந்ததை கண்டு, மாண்பமை உயர்நீதிமன்றமே முன் வந்து நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி, சட்டத்தின் மேன்மையைக் காப்பாற்றியுள்ளதும் பாராட்டத்தக்கது!

அவருடைய கைது எப்போது என்பதே பரவலான கேள்வி.

.தி.மு.. அரசின் சட்டம் - ஒழுங்கு, நியாயப் பாதுகாப்பும் இந்த லட்சணத்தில் தான் உள்ளது என்பதைப் புரிந்து கொள்வீர்!

ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குச் சீட்டு மூலம் இந்த அநியாயக்காரர்களை அப்புறப்படுத்த ஆயத்தமாவீர்!

தாய்மார்களே, பெண்களே, ஒரு அய்.பி.எஸ்.   மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கே பாதுகாப்பில்லை. இந்த அநியாய அக்ரமங்களை ஒழித்துக் கட்ட ஒரே வழி தி.மு.. கூட்டணிக்கே வாக்களிப்பீர் -  வாய்ச்சவடால் வீரர்களை வீட்டிற்கு அனுப்புவீர்!

- "மணியோசை"

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image