தேர்தல் களத்தில்.....

 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021


10 மடங்கு இன்னும் சிறப்பாக பணியாற்றுவேன் முதல் அமைச்சர் தொகுதி என்ற சிறப்பை கொளத்தூர் அடையப் போகிறது தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை கொளத்தூரில் தளபதி மு..ஸ்டாலின் நேற்று (27.3.2021)  தெருத்தெருவாக வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது முதல்-அமைச்சர் தொகுதி என்ற சிறப்பை கொளத்தூர் அடையப்போகிறது. 10 மடங்கு இன்னும் சிறப்பாக நான் பணியாற்றுவேன், என்று அவர் கூறினார்.

சென்னை கொளத்தூர் தொகுதி தி.மு.. வேட்பாளரும், தி.மு.. தலைவருமான மு..ஸ்டாலின், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று  இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்த ஜீப்பில் நின்றபடி, தளபதி மு..ஸ்டாலின் வீதி வீதியாக பொதுமக்களை சந்தித்து உதயசூரியன்சின்னத்தில் வாக்கு சேகரித்தார். 

திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது மு..ஸ்டாலினுக்கு குழந்தைகள், சிறுவர்கள் ரோஜாப்பூ அளித்தனர். அப்போது குழந்தைகளின் கன்னத்தை ஆசையுடன் தடவி மு..ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அயனாவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய மு..ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம், ஜி.கே.எம். காலனி பகுதியில் நிறைவடைந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருத்தெருவாக மு..ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது தி.மு.. தொண்டர் ஒருவரது ஆண் குழந்தைக்கு கவினேஷ் என்று மு..ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

பிரசாரத்தின்போதுதி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம்தேதி நடைபெற இருக்கிறது. கொளத்தூரில் வழக்கம்போல தி.மு.. வேட்பாளராக களமிறங்கி இருக்கிறேன். கொளத்தூர் தொகுதி என்று சொல்வதை விட இது நம்ம தொகுதி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இன்றுதான் ஓட்டுக் கேட்டு இங்கு வந்திருக்கிறேன். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தாமதமாக வந்ததற்கு நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்,” என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

அதன்படி, நம்ம எம்.எல்.., நம்ம வீட்டுப்பிள்ளை ஊர் ஊராக சுற்றிக் கொண்டு இருக்கிறார். அதனால் நம்ம தொகுதியை பற்றி கவலையில்லை. இன்னும் கூட சுற்றட்டுமே..., என்றுதான் சொல்வீர்கள். இருந்தாலும் எனக்கு மனசு கேட்கவில்லை. என்ன... இவரு இவ்வளவு லேட்டா தொகுதிக்கு வராறே?’, என ஒரு சிலருக்கு என்மேல் கோபம் இருக்கலாம். இந்த கோபம் கூட உண்மையான கோபம் அல்ல, ஒரு உரிமை கலந்த செல்லக் கோபம் தான். இந்த கோபம் கூட இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்போது வந்திருக்கிறேன்.

கொளத்தூர் தொகுதியில் ஒரு எம்.எல்..வாக, எதிர்க்கட்சித்தலைவராக எப்படி எல்லாம் நான் பணியாற்றி இருக்கிறேன்? என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். மழை, புயல், வெள்ளம் என எந்த இயற்கை பேரிடர் என்றாலும் சரி, உடனே இந்த தொகுதிக்கு ஓடோடி வந்திருக்கிறேன். கரோனா காலத்திலும் இந்த தொகுதி மக்களை வந்து சந்தித்தேன். ஆக வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவை உங்களை வந்து சந்தித்து பேசி வருகிறேன்.

இனி கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆட்சிக்கு வரப் போகிறோம். எந்த தொகுதிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு கொளத்தூர் தொகுதிக்கு உண்டு.

234 சட்டமன்ற தொகுதிகளில் முதல்-அமைச்சர் வேட்பாளர் தொகுதி இந்த கொளத்தூர் தொகுதி. ஆக ஒரு எதிர்க்கட்சி தலைவராக எப்படி பணியாற்றினேனோ... அதைவிட 10 மடங்கு இன்னும் அதிகமாக ஆளும் கட்சியாக, முதல்-அமைச்சராக இன்னும் பல மடங்கு சிறப்பாக பணியாற்ற முடியும்.

234 தொகுதிகளிலும், கொளத்தூர் தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே என் எண்ணம். அதை நிச்சயம் செய்வேன். அந்த நம்பிக்கை மக்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களுக்காக ஓடியாடி உழைக்கக்கூடிய, உங்களில் ஒருவனாக எனது பணியை தொடங்க உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தாருங்கள்.

என்னை என்று சொல்வதை விட உங்கள் வீட்டுப் பிள்ளையை தேர்ந்தெடுங்கள். உங்களுக்காக பணியாற்ற எங்களுக்கு உத்தரவிடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து சைதாப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் தி.மு.. வேட்பாளர்கள் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), .எம்.வி.பிரபாகர்ராஜா (விருகம்பாக்கம்), காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா (வேளச்சேரி) ஆகியோரை ஆதரித்து மு..ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னையில்

2ஆவது நாளாக

அஞ்சல் வாக்குகள் பதிவு

சென்னையில் 2ஆவது நாளாக அஞ்சல் வாக்குகள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா பாதித்தவர்கள் அஞ்சல் மூலம் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அஞ்சல் வாக்கு அளிப்பதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று (27.3.2021) முதல் சென்னையில் அஞ்சல் வாக்கு பெறும் பணி தொடங்கியது. அதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கே சென்று அஞ்சல் வாக்குகள் பெறப்படுகின்றன.

இதனை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி 2வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 7,300 பேருக்கு அஞ்சல் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று தேர்தல் அலுவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஒரு குழுவிற்கு 15 பேர் என மொத்தம் 75 வாக்குகளை பதிவு செய்ய வேண்டிய நிலையில், 64 வாக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டன.

மீதம் உள்ள நபர்களில் ஒரு சிலர் உயிரிழந்துள்ளதாகவும், சிலரின் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் வாக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்:

உயர்நீதிமன்றம் உத்தரவு

அஞ்சல் வாக்கு பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் பெயர் விவரப்பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வருகிற 29ஆம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்கவேண்டும் என்று தி.மு.., தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இந்த விவரப் பட்டியலை வழங்காமல் அஞ்சல் ஓட்டுக்களை தேர்தல் அதிகாரிகள் பெறுவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.. வழக்குத் தொடர்ந்தது.

அதேபோல, அஞ்சல் வாக்குகள் பதிவு செய்வதில் முறைகேடுகளைத் தவிர்க்க, அஞ்சல் வாக்கு உறைகளில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் கையெழுத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு அவசர வழக்காக 26.3.2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது தி.மு.., தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், பெரும்பாலான இடங்களில் அஞ்சல் வாக்காளர்களின் பட்டியலை வழங்காமலேயே வாக்குகள் பெறப்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜகோபாலன், மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. பட்டியல் வழங்கப்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகே அஞ்சல் வாக்குகளை பெற தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அஞ்சல் வாக்குகள் பெறும்போது வேட்பாளர் பிரதிநிதிகளின் கையெழுத்தைப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை தற்போதைய நிலையில் நிறைவேற்ற முடியாது.

தொகுதியில் ஏராளமான வேட்பாளர்கள் இருப்பதால் இது சாத்தியமில்லை என்று வாதிட்டார்.

பாதுகாப்பு அறை

அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அஞ்சல் வாக்குகளில் முறைகேடு செய்ததாக எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்தராத வகையில், அவற்றை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய அறையில் பாதுகாப்பாக தேர்தல் ஆணையம் வைத்திருக்கவேண்டும் என்று கூறி, தி.மு.., தாக்கல் செய்த 2 வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
கோயிலும், 'தினமணி'யும்!
எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்!
Image