உத்தரப் பிரதேசம் உத்தரகாண்டை தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும்மதமாற்றம் தடை சட்டமாம்!

போபால், மார்ச் 11 உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களைத்  தொடர்ந்து, மத்தியபிரதேச மாநிலத்திலும்மதமாற்றம் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக

ரூ.1 லட்சம் அபராதம், 10ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத் எனப்படும் காதல் திருமணம் என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தை பாஜக ஆட்சி செய்யும், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை  அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக அரசு ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள்

நுழைய தடை:  கிராம பஞ்சாயத்து முடிவு

பாக்பத்(மேவ) மார்ச் 11 மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை விதிக்க காப் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தின் பீகார் எல்லையை ஒட்டியுள்ள முசாபர்நகர் மற்றும் பாக்பட்டில் உள்ள கிராமங்களில் குறைந்தபட்சம் 90 விழுக்காடு கிராமங்கள் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், தங்கள் கிராமங்களில் நுழைவதற்கு தடை விதித்துள்ளன. இந்த தடை விதிப்பு மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதிபால் சிங் ஆகியோருக்கும் பொருந்தும் என்றும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கிராம மக்கள் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், இந்த தடை விதிப்பு அண்மையில் நடைபெற்ற காப் பஞ்சாயத்துகளின் கூட்டத்தில்  எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி. நிதியுதவியுடன்

எழும்பூரில் திருமண மண்டபம்

சென்னை, மார்ச் 11-  திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியினின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்ட ரூ.41 லட்சமும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்  ரவிச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ.3கோடியே 50 லட்சம் செலவில்  பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

சென்னை, எழும்பூர், சச்சிதானந்தம் தெருவில் அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரில்  இந்த திருமண மண்டபம் விரைவில் மக்கள் பயன்பாட்டுகு வரவுள்ளதாக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.  

Comments