செய்தியும் சிந்தனையும்

'சாலை ஓரத்தில் வேலையற்றதுகள்!'

தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் அரசு வேலைக்காகக் காத்திருப்பு.

- வேலை வாய்ப்பு பயிற்சித்துறை தகவல்

அறிஞர் அண்ணா சொன்ன துண்டு! 'சாலை ஓரத்தில் வேலை யற்றதுகள் - முகத்தில் விபரீதக் குறி!' 

அரசியல் வாண வேடிக்கையில் கவனம்!

பட்டாசு ஆலைகளில் உயிர் இழப்புகளும், பல்வேறு ஆலை களின் கதவடைப்புகளும் தொழி லாளர்கள் வாழ்வைப் பாதிக் கின்றன.

- தி.மு..  தலைவர் மு.. ஸ்டாலின்

அரசியல் மத்தாப்பு வாண வேடிக்கையில் இவற்றை எல் லாம் யார் கவனிக்கப் போகி றார்கள் - என்று அரசு கருதுகிறது போலும்!

சுண்டல் விநியோகம்!

சென்னையில் ஒரே நாளில் அதிமுக சார்பில் போட்டியிடும் 8241 பேர்களின் நேர்காணல் முடிந்தது.

என்ன சுண்டல் விநியோகமோ!

'அவன் பாத்துப்பான்?'

காஞ்சிபுரம் - அத்திவரதன் வழிபாட்டில் - மோசடி டிக்கெட் டுகள் விற்பனை - விசாரணை ஆரம்பம். 

கடவுள் தலைமீது பாரத்தைப் போட்டுத் தப்பிக்க வேண்டியது தானே!

'கிலியோ!'

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ராகுல்காந்திக்குத் தடை விதிக்க வேண்டும்.

- தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பா... புகார்

அந்த அளவுக்குக் 'கிலியோ!'

'சட்டி சுட்டதடா!'

தேர்தல் புறக்கணிப்பு - தமிழருவிமணியன் அறிவிப்பு.

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

'அய்யாசாமி ஆளை விடுங்க!'

 புதுவை அரசியல் வாதிகளின் ஆன்மிகத்தலம் சேலம் - அப்பா பைத்திய சாமி கோயில்

'அய்யா சாமி ஆளை விடுங்க' என்போர் எல்லாம் இங்குதான் அடைக்கலம் ஆவார்களோ!'

நல்ல கூட்டுப் பொரியல்!

அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலைத் தொகுதியில் பா... தேர்தல் அலுவலகம் திறப்பு.

 கேட்டால் பா... கூட்டணியில்தானே அதிமுக இருக்கு என்பார்களோ!

சபாஷ்! சபாஷ்!!

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு.

- அசாம் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் 

அசாமுக்கு மட்டுமல்ல - அகில இந்தியாவுக்குமே தேவை தான்!

கவனமும், விழிப்புமே அருமருந்து!

ஒரு மாதத்துக்குப் பின்பு இந்தி யாவில் ஒரே நாளில் (4.3.2021) கரோனா பாதிப்பு 17407.

அலட்சியக் கிருமிகளின் சேட்டை!

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image