அஞ்சல் ஓட்டுப் பதிவு ஆசிரியர்களுக்கு துவக்கம்

 சென்னை, மார்ச் 29 தமிழக சட்டசபை தேர்தல் வரும், ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. ஆசிரியர்கள் ஓட்டுச் சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுவதும் நடந்தது. அவர்களில் அஞ்சல் ஓட்டுக்கு விண்ணப்பித்தோருக்கு, 27.3.2021 அன்று ஓட்டுகளை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் ஆணைய அனுமதியுடன் சில இடங்களில், பெட்டிகள் வைக்கப்பட்டு, அஞ்சல் ஓட்டுகள் பெறப்பட்டன.இதற்கிடையில், 50 சதவீத ஆசிரியர்களுக்கு அஞ்சல் ஓட்டுகள் வரவில்லை என, பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களுக்கு, தேர்தலுக்கு முந்தைய நாள் நடக்கும் வகுப்பில், அஞ்சல் ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.


Comments