சப்போட்டாவின் மருத்துவ குணங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 29, 2021

சப்போட்டாவின் மருத்துவ குணங்கள்

சர்க்கரைப் போல் இனிக்கும் பழமான சப்போட்டாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப் படும். மருத்துவ குணமிக்க இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

*சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும்.

*சப்போட்டா கூழுடன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.

*சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.

*பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்துக்கு உண்டு. சப்போட்டா பழத்தை சாப்பிட்ட பிறகு, ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்துக்கு இது நல்ல மருந்து.

*சப்போட்டா கூழுடன் சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்து நன்றாகக் காய்ச்சிக் குடித்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும்.

*ஆரம்ப நிலை காச நோய் உள்ளவர்கள் சப்போட்டாப்பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரம் பழமும் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.

*மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.

*சப்போட்டாக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மை உடையது.

*தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்குப் போகுமுன் ஒரு டம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் கிட்டும்.

*கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்ல பயனளிக்கும்.

*சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள், ரத்த நாளங்களைச் சீராக்கி, கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

*தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் நீங்கும்.

*சப்போட்டாப் பழம், கொய்யா, திராட்சை இவற்றை ஒன்றாகக் கலந்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்

No comments:

Post a Comment