குஜராத் முதல் அமைச்சர் மோடியும் - இந்தியப் பிரதமர் மோடியும் - முரண்பாட்டைப் பாரீர்!

நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்புவர்கள்நீட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அதன் வாயிலாகவே மருத்துவம் படிக்க சேர்க்கப் படுவர் என்றும் மத்திய அரசும், உச்சநீதி மன்றமும் கூறி உள்ளன.

ஆனால், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலத்தில் அமல் படுத்த மாட்டோம் என்று கூறி வந்தார். ஆனால், தற்போது பிரதமராக வந்ததும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து இரட்டை வேடம் போடுகிறார்.

கடந்த 2012-2013ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும்நீட்' நுழைவுத் தேர்வை கொண்டுவர அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதுகுறித்து மத்திய எம்சிஅய் மூலம் அனைத்து மாநிலங்களுக்கு  சுற்றறிக்கையும்  அனுப்பப்பட்டது.

(பின்னர்  உச்சநீதிமன்ற  ஆணைப்படி கை விடப்பட்டது)

 குஜராத் மாநிலத்தில் மோடி தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வந்தது. அப்போது, குஜராத் அரசு  மத்திய அரசின் 'நீட்' அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போதைய குஜராத் மாநில அமைச்சர் ஜெய்நாராயணன் வியாஸ் எம்.பி.பிஎஸ் படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்   தேர்வு(NEET) அய் குஜராத் அரசு ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார்.

  நீட்' அய் ஏற்றுக்கொள்ள  முடியாது என எங்களது மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் நாங்கள் தெரிவித்தோம். மருத்துவக் கல்வியில் தேர்ச்சி பெற விரும்பும் குஜராத் மாணவர்களிடையே, இது போன்றநீட்' தேர்வு அறிவிப்பு எந்தவொரு  பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது  என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக மூன்று உறுப்பினர்கள் நியமிக் கப்பட்டு உள்ளனர்என்று கூறினார்.

இவ்வாறு கடுமையாக அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வானநீட்'டுக்கு குஜராத் முதல் அமைச்சராக இருந்த நரேந்திரமோடி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். பிரதமரான நிலையில்நீட்'டை திணித்திணி என்று திணிப்பானேன்? இவர்களை அடையாளம் கண்டு தோற்கடிப்பீர்! சமுக நீதியின் கூட்டணி வெற்றிக்குப் பாடுபடுவீர்!

Comments