தத்ரா நகர் ஹவேலி நாடாளுமன்ற உறுப்பினர் மரணம்: விசாரணை நடத்த கோரிக்கை

 புதுடில்லி,மார்ச் 11 தாத்ரா நகர் ஹவேலி எம்.பி. மோகன் தலேகர் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என  மக்களவை தலைவரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது

பாரதிய நவசக்தி கட்சியின் தலைவரான மோகன் டெல்கர். யூனியன் பிரதேசமான தாத்ரா- நாகர் ஹவேலி எம்.பியாக இருந்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர். 7 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் காங்கிரஸ்காரர். இவர்  தெற்கு மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் உள்ள ஓட்டலில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி  இறந்து கிடந்தது தெரிய வந்தது.  காவல்துறையினர் அவரது உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் இருந்து, தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டகடிதம் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த  மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாராட்டிராவில் கூட்டணி ஆட்சி செய்துவரும் மகா விகாஸ் அகாதி எம்.பி.க்கள், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யான சுப்ரியா சூலே தலைமையில் நாடாளுமன்ற அவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து, தலேகர்  மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனு கொடுத்தனர். 

தொடர்ந்து 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மோகன் டெல்கருக்கும் பல முறை பாஜவில் இணைய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெருக்குதல் கொடுத்ததாக கடந்த ஆண்டு அவரது உதவியாளர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார் இணையத்தில் வெளியான இந்த பேட்டி உடனடியாக அகற்றப்பட்டது.

இதனால் அவரது மரணத்திற்கு யார் காரணம் என்று மகாராட்டிரா மாநில அரசியல் தலைவர்கள் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர்.

Comments