மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு புத்தகம் வழங்கி கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

மயிலாடுதுறை, மார்ச் 21- மயிலாடுதுறை தொகுதி சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ராஜ்குமார் 17.3.2021 அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்.

மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்

கி.தளபதிராஜ் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப் பட்ட "திமுக கூட்டணிக்கு வாக்க ளிக்க வேணடும் ஏன்?" புத்தகம் வழங்கப்பட்டது. நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் அரங்க.நாகரத்தினம், இளைஞரணி செய லாளர் .அருள்தாஸ், இரெ.புத்தன் ஆகியோரும் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Comments