"மோடியே திரும்பிப் போ!" தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

வழக்கம் போல #GoBackModi இந்திய அளவில் ட்ரெண்ட்!!

சென்னை,மார்ச்30- தமிழகம் வரும் மோடிக்கு சுட்டுரையில் எதிர்ப்பு கிளம் பியுள்ளது. வழக்கம் போல#GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில்    ட்ரெண்டாகி  வருகிறது.  சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.

அதிமுக கூட்டணியில் இடம் பெற் றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட் டியிடும் நிலையில் பாஜக வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய டில் லியில் இருந்து தேசிய தலைவர்கள் தமி ழகத்திற்கு படையெடுத்து வருகின் றனர்.அந்த வகையில் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் முருகனை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (30.3.2021) பிரச்சாரம் செய்கிறார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக் சுட்டுரையில் ட்ரெண்ட் ஆனதைப்போல், இன்றும் (மார்ச்30) அதிகாலை முதலே 'கோ பேக் மோடி' ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அது மட்டு மல்லாமல் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி காட்ட முடிவு எடுத்துள்ளனர்.

அதிமுக, பாஜக கூட்டணியிலுள்ள கட்சியின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்புக்கான விளம்பரங்களில், சுவரெழுத்துகளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள் ளிட்டோரின் படங்களை இடம் பெறச் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து வாக்கு கோரும் விளம்பர சுவரெழுத்துகளில் அதிமுக வேட்பாளரைப்போல் ஜெய லலிதாவின் ஆசிபெற்ற வேட்பாளர் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி வரு கிறார். அதற்கான ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப் பட்டு வைரலாகி வருகிறது. கூட்டணி யின் வேட்பாளர்கள் பலரும் மோடியின் படமே இடம்பெறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் தமிழ கத்துக்கு வருகைதரும் மோடிக்கு டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில்கோ பேக் மோடிடிரண்டிங் ஆகி வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஒருமனதாக நிறைவேற்றிய மருத்துவக்கல்வியில்  நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய இரு சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல், நீட் தேர்வை மாணவர்களிடையே திணித்து வருவதற்கும், குடியுரிமை திருத்தச்சட்டம், 3 வேளாண் சட்டங்கள், மாநில உரிமைகள் பறிப்பு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் படுகொலைகள், அய்.நா. தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் மத்திய அரசின் நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மத்திய பாஜக அரசுமீது கடுங்கோபத்தில் தமிழக மக்கள் இருந்து வருகிறார்கள். அந்த கோபம் மோடி, அமித்ஷா வருகையின்போதெல்லாம் எதிரொலித்து வந்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் பாஜக ஒரு உறுப்பினரைக்கூட கொண்டிராத நிலையில், அதிமுகவை தன் கைப்பாவை யாக்கி, பொதுவிநியோகத்துறை, மின் துறை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மாநில அரசின் அதிகாரங்களை, உரிமைகளை தட்டிப் பறித்துக்கொண்டு வந்துள்ளது. குடி யுரிமை திருத்தச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பாஜக அரசின் திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளித்து விட்டு, அவற்றை எதிர்ப்பதாக தேர்தல் நேரத்தில் அதிமுக கூறிவருகிறது.

மாநில மக்களின் நலனை புறந் தள்ளிவிட்டு மாநில உரிமைகளைப்பற்றி கவலைப்படாத அதிமுகமீதும், மத்தி யில் ஆளும் பாஜகமீதும் மக்களின் கோபம் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதற்கு உதாரணமே 'கோ பேக் மோடி'.

Comments