சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் இமையத்துக்கு நமது வாழ்த்துகள்!

திராவிட இயக்கச் சிந்தனையாளரும், சிறந்த தமிழ் இலக்கியப் படைப் பாளரும் முற்போக்குக் கொள்கையாளருமான தோழர் இமையம் அவர்களுக்கு அவர் 2018இல் எழுதி வெளியான ‘செல்லாத பணம்’ என்ற புதினத்திற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்திருப்பதை அறிய பெரு மகிழ்ச்சியடைகிறோம்! எளிய ஒடுக்கப்பட்ட விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவரும், கிராம மக்களின் வாழ்க்கையை நன்கு புரிந்தவரும் சமூக ஆர்வலருமான அவரது முதல் இலக்கியப் படைப்பான ‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவல் புதினம் 1994-இல் வெளியானது. பல்வேறு விருதுகளைப் பெற்றவர்; கனடா நாட்டின் இலக்கிய வட்டாரங்களால் அழைத்து ’இயல் விருது’ வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட திராவிடச் செம்மல் இவர். பள்ளி ஆசிரியர். நம்மால் பெரியார் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவரும் கூட. சீரிய இலட்சியவாதியான அவருக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுதலும்! இவருக்குக் கிடைத்த விருது, அறிவு, ஆற்றலுக்குக் கிடைத்த விருது மட்டுமல்ல... கொள்கை இலக்கி யங்களில் ‘நம்மவர்கள்’ யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றும் உண்மையும் ஆகும்.   சென்னை தலைவர், 13.3.2021 திராவிடர் கழகம்

Comments