தேர்தலுக்கு முன் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறது பா.ஜ.க.: மம்தா குற்றச்சாட்டு

 பாங்குரா, மார்ச் 23 தேர்தலுக்கு முன் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை பா... வழங்குகிறது என மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா  குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

தேர்தலுக்கான பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  மேற்கு வங்காளத்தின் பாங்குரா நகரில் நடந்த பொது கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் மம்தா, கடந்த முறை வாக்களித்தவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், ஒவ்வொரு கணக்கிலும் பா... ரூ.15 லட்சம் பணபரிமாற்றம் செய்ததா? தேர்தலின்போது உங்களுக்கு அரிசி, பருப்பு தருவோம் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து விட்டு, உங்களுடைய வாக்குகளை வாங்கி சென்று விடுவார்கள் என கூறினார். பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் வசதியை பாங்குராவில் தனது அரசு செய்து கொடுத்துள்ளது என சுட்டிக்காட்டி அவர் பேசினார்.

Comments