குறைந்தபட்ச அடிப்படை வருமானம்

  மம்தா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகவல்

கொல்கத்தா, மார்ச் 18 குறை ந்தபட்ச அடிப்படை வரு மானம் மற்றும் மாணவர் களுக்கு 10 லட்ச ரூபாய்கான கடன் அட்டை வழங்கப்படும் என்று மம்தா   வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டப்பேரவைக்கு 8 கட்டங் களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப் படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரி ணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடது சாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக் கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட் சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் தேர் தல் அறிக்கையை அம்மாநில முதல் அமைச்சர் மம்தா  வெளியிட்டார். மேலும்

மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்காக மிகுந்த அர்ப் பணிப்புடன் பணியாற்றுவேன் என்று கூறிய மம்தா,  தேர்தல் அறிக்கை தொடர்பாக பேசுகையில், மாநில அரசு, கணவனை இழந்த பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மற்றும் சிறப்புத் திறன் கொண் டவர்களுக்கு பண உதவி மூலம் உதவியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வங்காளத் தின் ஒவ்வொரு குடும்பத்திற் கும் இப்போது குறைந்தபட்ச அடிப்படை வருமானம் வழங் கப்படும்.

இதன் கீழ், 1.6 கோடி தகுதி வாய்ந்த பொது வகை குடும் பங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 ரொக்க பரிமாற்றம் கிடைக்கும், இது ஆண்டுக்கு ரூ .6,000 ஆகும். ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகை குடும்பத்திற்கும் மாதந் தோறும் ரூ .1,000 ரொக்கம் கிடைக்கும், இது ஆண்டுக்கு ரூ.12,000 ஆகும். மாநிலத்தில் வேலையின்மை  விகிதத்தை பாதியாக குறைக்க ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவ தாக இந்த அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு வேலை வாய்ப்பு பெறுவதற்காக ஆண்டு தோறும் கூடுதலாக 10 லட்சம் எம்.எஸ்.எம்..க்கள் அமைக் கப்படும்.

மேலும் உயர் படிப்பைத் தொடர  மாணவர்களுக்கு 4 சதவீத வட்டியில் 10 லட்ச ரூபாய்க் கான கடன் அட்டை வழங்கப்படும். கர்ப்பிணி களுக்கு 731 நாட்கள் பேறுகால விடு முறை அளிக்கப்படும். சிறுகுறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங் கப்படும். ஒன்றரை கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருட்கள் வழங்கப்படும். கேண்டீன்கள் மூலமாக 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப் படும். அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

Comments