அவிநாசி தொகுதியில் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேட அ.தி.மு.க. வினர் முயற்சி

 அவிநாசி  செயல்வீரர்கள் கூட்டத்தில் .ராசா குற்றச்சாட்டு

அவிநாசி, மார்ச் 21- -மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அவிநாசி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம், அவிநாசி சேவூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று )20.3.2021) நடைபெற்றது. கூட் டத்திற்கு திருப்பூர் வடக்கு  மாவட்ட திமுக பொறுப்பா ளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சிறப்புரை யாற்றிய நீலமலை தொகுதி மக்களவை உறுப்பினர்

. ராசா குறிப்பிட்டதாவது;

நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் நல்ல அரசியல் மாற்றத்திற்கான தேர்தலாகும்..அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார் பில் போட்டியிடும், ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மீது திட்டமிட்டு, ஜாதி வெறியைத் தூண்டி, அவதூறு பரப்பி வெற்றியை பறித்து விடலாம் என அதி முக எண்ணுகிறது. அதிமுக வின் முயற்சி பலன் தராது. மக்கள் விழிப்புடன் இருக் கிறார்கள். அவிநாசி சட்ட மன்ற தொகுதி ஒரு நல்ல மக்கள் தொண்டரை உறுப் பினராக பெறப் போகிறது.  

திமுக ஆட்சி அமைந்த வுடன் அவிநாசி தொகுதியில் மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அதியமான் அவர்களும், நானும் ஒன்றி ணைந்து நிறைவேற்றுவோம்.

மு..ஸ்டாலின் அவர்கள் தனது 23ஆவது வயதில மிசா சட்டத்தை எதிர்த்து சிறைச் சாலைக்கு சென்றவர்.ஆனால் கூவத்தூர் பங்களாவில் சட்ட மன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்து சுகபோ கங்களை நிகழ்த்தி  எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.இதை நான் சொல்லவில்லை,

அதிமுக வினரே சொல் கின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வராக பதவி யேற்ற எடப்பாடி பழனிசாமி தமிழக உரிமைகள் அனைத் தையும் மத்திய அரசுக்கு பறி கொடுத்து வருகிறார். அதி முக ஆட்சி இனி தொடர்ந் தால் எஞ்சியுள்ள உரிமைக ளும் பறிபோகும் அபாயம் உள்ளது.

என் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று கூறி வழக்கு தொடுத்தார்கள். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் என்னை குற்றவாளி இல்லை என கூறிவிட்டார்.  முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீதான ஊழல் வழக் கில் "அரசியல் சட்டத்தையே படுகொலை செய்கின்ற அள வுக்கு ஜெயலலிதா ஊழல் செய்து இருக்கிறார் " என்று  நீதிபதி கூறினார்.ஆனால் எடப்பாடி பழனிசாமி ஜெய லலிதா ஆட்சி நடத்துவதாக கூறுகிறார்.அப்படி என்றால் ஊழல் ஆட்சி நடத்துவதை அவரே ஒப்புக்கொண்டு விட் டார்.

ஆகவே மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி செயல்வீரர் கள் அனைவரும் இணைந்து வீடு,வீடாகச் சென்று வாக் காளர்களை சந்தித்து  திமுக தேர்தல் அறிக்கையில் சொல் லப்பட்டுள்ள செய்திகளை தெரிவித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதியமான் அவர்களை வெற்றி பெறச்செய்யவேண்டும் இவ் வாறு அவர் உரையாற்றினார்.

நிகழ்வில் அவிநாசி சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பா ளரும், ஆதித்தமிழர் பேரவை நிறுவனருமான இரா. அதிய மான் உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் பங் கேற்றனர்.

Comments