தேர்தல் களத்தில்.....

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

இணையதளம் மூலம்வேட்புமனு தாக்கல்முதல் முறையாக அறிமுகம்

புதுவை மாநிலத்தில் முதல் முறையாக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை இணையதளம் மூலமாக தாக்கல் செய்யும் முறை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் முதல் முறையாக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை இணையதளம் மூலமாக தாக்கல் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப நோடல் அதிகாரி ராஜசேகர் கூறியதாவது:-

இணையதளம் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்ய  இணையதளத்தை பயன் படுத்த வேண்டும். முதலில் செல்பேசி எண்ணை கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு முறை கடவுச் சொல் ஒன்று வரும். அதன்பின் உள்ளே சென்று அதில் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வேட்பு மனுவை பூர்த்தி செய்யலாம். இதேபோல் பிரமாணப் பத்திரத்தையும் இதன் மூலம் பூர்த்தி செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பணத்தையும் செலுத்த முடியும். இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது அதனை தேர்தல் நடத்தும் அதிகாரி பார்வையிட முடியும். இதன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்அனுமதி பெற முடியும்.

இணையதளம் மூலம் வேட்புமனுக்களை பூர்த்தி செய்வது கட்டாயம் கிடையாது. விருப்பப்படுபவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். பழைய முறையும் வழக்கம் போல் நடைமுறையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தால் 6 மாதம் சிறை

தேர்தல் பிரசாரத்துக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தால் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு.

தமிழக போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பொதுக் கூட்டத்துக்கோ அல்லது தேர்தல் பிரசார கூட்டத்துக்கோ பொதுமக்களை அழைத்துவர அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி வந்தால் வாகனம் சிறை பிடிக்கப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். இதன்பின்பு, வாகன உரிமையாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம்.

அதுமட்டுமல்லாமல் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதி சீட்டை தற்காலிக மாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யவும், ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்

படும். எனவே, வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 தி.மு.. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு

 தி.மு.. கூட்டணி கட்சிகளுக்கு நேற்று (10.3.2021) தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டன.

சட்டமன்றத்தேர்தலில் தி.மு.. தலைமையிலான கூட்ட ணியில் காங்கிரஸ், .தி.மு.., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன

.தி.மு..வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகள் விவரம் வருமாறு:-

1.மதுராந்தகம் (தனி).

2.சாத்தூர்.

3.பல்லடம்.

4.மதுரை தெற்கு.

5.வாசுதேவநல்லூர் (தனி).

6.அரியலூர்.

மேற்கண்ட தொகுதிகளில் தி.மு..வின் உதயசூரியன்' சின்னத்தில் .தி.மு.. போட்டியிட உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி

இதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி அந்த கட்சிக்கு கடையநல்லூர், சிதம்பரம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.. கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை மற்றும் மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்தநிலையில் ஆதி தமிழர் பேரவை கட்சிக்கு அவினாசி (தனி) தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 3 கட்சிகளும் தி.மு..வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளன.

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரிப்பு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண் ணிக்கை 34 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கையேடு-2021 என்ற புத்தகத்தை மத்திய அரசின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (பி.அய்.பி.) தயாரித்துள்ளது. இதை சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.


பின்னர் சத்யபிரத சாகு பேசியதாவது:-

இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை பிரதிபலிக்கும் புத்தகமாக இது உள்ளது. 1951-ம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நடந்த சட்டமன்ற தேர்தலின் விவரங்களை இதில் காணலாம். தமிழகத்தில் பல சட்டமன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. எப்போதுமே சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

பொதுவாக, வாக்குச்சாவடிகளை கைப் பற்றுதல் போன்ற சம்பவங்கள் இங்கு நடப்பதில்லை. மிகவும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடக்கும் பாரம் பரியத்தை பெற்றுள்ள மாநிலம் என்பதில் இங்குள்ள மக்களுக்கு பெருமை உண்டு. அந்த வகையில் தங்களுக்கான தலைவர்களை மக்கள் ஆண்டாண்டு காலமாக தேர்வு செய்து வருகின்றனர்.

நடக்க இருக்கும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி செய்திருக்கிறோம். வாக்குப்பதிவு இயந் திரம், விவிபேட் எந்திரங்களை மிகுந்த பாது காப்பாக வைத்திருப்பதோடு, அவற்றை இட மாற்றம் செய்வதற்கும் மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.கரோனா பரவல் இன்னும் இருக்கிறது. அது மேலும் பரவாதபடி அனைவருமே கரோனா தடுப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாவட்டங்களில் கூட்டங் களை நடத்துவதற்காக, நெரிசலை சமாளிக்கும் அளவில் பெரிய அளவில் இடவசதியுள்ள பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஊர்வலங்களை நடத்தவும் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கூட்டங்களில் பங்கேற்கலாம்.

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்ப தற்கான சக்கர நாற்காலி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பார்வையற்றவர்கள் வாக்களிக்கும் வசதியும் (பிரெய்லி எழுத்து பதிவுகள்) அளிக்கப்படும்.

பயிற்சி

இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக் கையை 34 சதவீதம் அதிகரிக்கிறோம். அங்கு பணியாற்ற இருக்கும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

மக்களுக்கு எந்தவித தூண்டுதலும் ஏற்படாத வகையில் சிறப்பு தேர்தல் செல வீன பார்வையாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். சி-விஜில் அலைபேசி செயலி மூலம் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்கள், படங்களை அளிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சத்யபிரதசாகுவிடம் இருந்து புத்தகத்தின் முதல் பிரதியை மூத்த பத்திரிகையாளர் மோகன் பெற்றுக்கொண்டார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத் தின் கூடுதல் பொது இயக்குனர் அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். இயக்குநர் குருபாபு வரவேற்றார். ஊடக தகவல் அலுவலர் கீதா நன்றி கூறினார்.

வாக்கு எண்ணும் மய்யங்களில் ஜாமர் கருவி பொருத்த வேண்டும்

திமுக கோரிக்கை

வாக்கு எண்ணும் மய்யங்களை சுற்றி 500மீ அளவுக்கு ஜாமர் கருவி பொருத்த திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பரபரப்புடன் இயங்கி வருகின்றன.

தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவுக் கான முழு ஏற்பாடுகளையும் முழு வீச்சில் செய்து வருகிறது. சம்பந்தப்பட்ட தொகுதி களுக்கு மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில், வாக்கு எண்ணும் மய்யங்களை சுற்றி 500மீ அளவுக்கு ஜாமர் கருவி பொருத்த திமுக தேர்தல் ஆணையத் திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர் பாக அக்கட்சியின் எம்பி திருச்சி சிவா தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்

Comments