திராவிடர் கழக பொதுக்குழுவில் பங்கேற்க கும்பகோணம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

13.03.2021 சனி காலை 10 மணிக்கு கும்பகோணம் ராயா மகாலில் நடைபெறும் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் மற்றும் மாலை 6 மணியளவில் கும்பகோணம் கடலங்குடித் தெருவில் நடைபெறும் திராவிடர் கழக பொதுக்குழு தீரமான விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கும்பகோணம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் காலை 9 மணியளவில் தாராசுரத்தில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி  தலைமையில், கழக பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், காப்பாளர்கள் இராஜகிரி கோ. தங்கராசு , வெ.ஜெயராமன், மண்டலத் தலைவர் மு. அய்யனார், மண்டல செயலாளர் .குருசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வை. இளங்கோவன், சு.விஜயகுமார், .சிவக்குமார், நகரத்தலைவர் கு.கவுதமன், நகர செயலாளர் பீ.இரமேஷ் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும். கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவண் சு.துரைராசு , கும்பகோணம் (கழக மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்.

Comments