அனைத்து ரயில்களையும் வழக்கம்போல் இயக்க ரயில்வேக்கு உத்தரவிட முடியாது! உயர்நீதிமன்றம்

சென்னை, மார்ச். 18-- அனைத்து ரயில்களையும் வழக்கம்போல இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலை யில், இன்னும் முழுமை யாக ரயில்கள் இயக்கப் படாமல் உள்ளன. இத னால், மீண்டும் அனைத்து, ரயில்களை இயக்க உத் தரவிடக்கோரி  திருச்செந் தூரை சார்ந்த வழக்குரை ஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில்,  தற்போது 65% ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. முழுமையாக ரயில்கள் எப்போது இயக் கப்படும் என ரயில்வே நிர்வாகம் இதுவரை அறி விக்கவில்லை. ஆனால் கரோனா குறைந்ததை தொடர்ந்து விமான போக்குவரத்து, திரைய ரங்கம் மற்றும் குளிர் சாதன பேருந்துகள் முழு மையாக இயங்கும் நிலை யில், மற்ற  பயணக் கட்ட ணங்களை விட மிக குறை வாக உள்ள ரயில்கள் சேவை எப்போது இயங் கும் என அறிவிக்கவில்லை.

இந்நிலையில், தமிழ கம் முழுவதும் இயங்கும் ரயில்கள் மற்றும் சென் னையில் இயங்கக்கூடிய புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே வுக்கு  உத்தரவு விட வேண் டும் என கூறியிருந்தார்.

இந்த மனு 16.3.2021 அன்று விசாரணைக்கு வந்தது.  விசாரணையைத் தொடர்ந்து, நீதிபதி அனைத்து ரயில்களையும் வழக்கம்போல இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது. கரோனா அச்சுறுத்தல் உள்ளது கரோனா பாதித் தோர் எண்ணிக்கை அதி கரித்து வருவதாக கருத்து தெரிவித்தனர். மேலும், தற்போதைய கரோனா சூழலில் நீதிமன்றங்களை திறக்கும் முடிவைக் கூட திரும்ப பெற்றுள்ளோம் என நீதிபதிகள் தெரிவித் தனர்.

Comments