தேர்தல் களத்தில்..... தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

தி.மு.. கூட்டணியில்  போட்டியிடும் கட்சித் தொகுதிகள் பட்டியல் வெளியீடு

தி.மு.. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பட்டியல் வெளியானது.

 காங்கிரஸ் போட்டியிடும்25 தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. பொன்னேரி (தனி).

2.சிறீபெரும்புதூர் (தனி).

3.சோளிங்கர்.

4.ஊற்றங்கரை (தனி).

5.ஓமலூர்.

6.உதகமண்டலம்.

7.கோவை தெற்கு.

8.காரைக்குடி.

9.மேலூர்.

10.சிவகாசி.

11.சிறீவைகுண்டம்.

12.குளச்சல்.

13.விளவங்கோடு.

14.கிள்ளியூர்.

15.ஈரோடு கிழக்கு.

16.தென்காசி.

17.அறந்தாங்கி.

18.விருத்தாசலம்.

19.நாங்குநேரி.

20.கள்ளக்குறிச்சி (தனி).

21.சிறீவில்லிபுத்தூர் (தனி).

22.திருவாடானை.

23.உடுமலைப்பேட்டை.

24.மயிலாடுதுறை.

25.வேளச்சேரி.

இந்திய கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகள்

1. பவானிசாகர் (தனி).

2.திருப்பூர் வடக்கு.

3.வால்பாறை (தனி)

4.சிவகங்கை.

5.திருத்துறைப்பூண்டி (தனி)

6.தளி.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு  3 தொகுதிகள்

1. பெருந்துறை

2.திருச்செங்கோடு.

3.சூலூர்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்

 1.பாபநாசம்.

2.மணப்பாறை.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்

1.வானூர் (தனி).

2.காட்டுமன்னார்கோவில் (தனி).

3.செய்யூர் (தனி).

4.அரக்கோணம் (தனி).

5.நாகப்பட்டினம்.

6.திருப்போரூர்.

தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு.

உதயசூரியன் சின்னத்தில் வேல்முருகன் போட்டி.

.தி.மு.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு 

.தி.மு.. வேட்பாளர்கள் பட்டியலை வைகோ நேற்று (11.3.2021) வெளியிட்டார். மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யா போட்டியிடுகிறார்.

தி.மு.. கூட்டணியில் .தி.மு..வுக்கு மதுராந்தகம் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் .தி. மு..வினரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நேர்காணல் நடத்தினர்.

அதன்பின்னர் .தி.மு.. வேட்பாளர்கள் பட்டியலை வைகோ நேற்றிரவு (11.3.2021) வெளியிட்டார்.

வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1. மதுராந்தகம் (தனி) - மல்லை சி..சத்யா (.தி.மு.. துணை பொதுசெயலாளர்).

2. சாத்தூர்-டாக்டர் .ஆர்.ஆர்.ரகுராமன் (விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்).

3. பல்லடம்-.முத்துரத்தினம் (திருப்பூர் மாவட்ட துணை செயலாளர்).

4. மதுரை தெற்கு-மு.பூமிநாதன் (மதுரை மாவட்ட செயலாளர்).

5. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார் (உயர்நிலை குழு உறுப்பினர்).

6. அரியலூர்-வக்கீல் கு.சின்னப்பா (அரியலூர் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர்).

.தி.மு.. வேட்பாளர்கள் 6 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

தி.மு.. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தமிமுன் அன்சாரி அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு கடிதம் அளித்திருந்தது.

இதைத்தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உள்பட நிர்வாகிகள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அங்கு தி.மு.. தலைவர் மு..ஸ்டாலினை சந்தித்து, கூட்டணிக்கு தங்களது ஆதரவு தொடரும் என்று தெரிவித்தனர்.

பின்னர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், தி.மு.. கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாதது வருத்தம் அளிக்கிறது. எனினும் .தி.மு..-பா... கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்' என்றார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி, .தி.மு.. கூட்டணியில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 565 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ், மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் நடந்தது.

கூட்டத்துக்கு பின்னர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், பேனர்கள் என இதுவரை 45 ஆயிரத்து 44 எண்ணிக்கையில் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் இனிமேல் அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் பேனர்கள், சுவர் விளம்பரங்கள் வைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவு கணக்கில் அவை சேர்க்கப்படும்.

சென்னையில், தகுந்த ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டு வருகிறது.

இதுவரை ரூ.30 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்துள்ளோம். நடத்தை விதிமீறல்கள் செய்யப்பட்டதாக இதுவரை 17 புகார்கள் பெறப்பட்டு, 14 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்காக இதுவரை 40 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அதில் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 பேர் என 30 ஆயிரம் பேர் வாக்குச்சாவடி பணிக்காக மட்டுமே போடப்பட்டுள்ளனர்.

சென்னையில் 565 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக மத்திய தொழில் படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கரோனா பாதிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி களுக்காக வீட்டில் இருந்து ஓட்டு போடும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில் இதுவரை 30 ஆயிரம் பேருக்கு 12-டி படிவம் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 3 நாட்களில் அனைவருக்கும் வழங்கப்பட்டு, 16ஆம் தேதி அதனை பரிசீலனை செய்து, எத்தனை நபர்கள் வீட்டில் இருந்து வாக்கு அளிக்கலாம் என இறுதி முடிவு எடுக்கப்படும்.

கரோனா தொற்று அதிகரித்திருப்பது உண்மை தான். இருந்தாலும், ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது போன்ற பாதிப்பு இல்லை.

சென்னையில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அந்தவகையில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்டிவிட்டால், 2 மாத காலத்துக்குள் 100 சதவீத பாதுகாப்பான நகரமாக சென்னை உருவாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments