கேரளாவில் மாநிலங்களவைத் தேர்தலை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 30 கேரளாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 உறுப்பி னர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 21-ஆம் தேதி முடிவடையும் நிலையில், அந்த பதவிகளுக்கு வருகிற 12-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசு சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டி யதை தொடர்ந்து, இந்த அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது மாநிலத் தில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருக்கிறது. இது தொடர் பாக முதல் அமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச் சூரியும் இது தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக  கேரளா வந்த அவர் இது தொடர் பாக செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

கேரளாவில் சட்டசபை தேர்தல் முடியும் வரை மாநிலங் களவை தேர்தலை நடத்தக்கூடாது என மத்தியில் ஆளும் பா.ஜனதா விரும்புகிறது. சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் சட்டசபை இடங்களில் மாற்றம் வரும் என அந்த கட்சி கருதுகிறது.

ஏனெனில் கேரளாவில் காலி யாகும் 3 மாநிலங்களவை இடங் களில் 2-அய் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வைத்திருக்கிறது. எனவே அதை மாற்றுவதற்கு இந்த சூழ்ச் சியை பா.ஜனதா பயன்படுத்து கிறது. ஆனால், தேர்தல் ஆணை யம் சுதந்திரமாகவும், எந்தவித அழுத்தங்களுக்கு அடிபணியாம லும் இருக்க வேண்டும். மாநி லங்களவை தேர்தலை தள்ளி வைத்திருப்பது சந்தேகம் அளிக் கும் வகையில் உள்ளது. இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது ஆகும் என்றார் அவர்.

Comments