விவசாயிகளின் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு: ராகுல் காந்தி


 புதுடில்லி, மார்ச் 27 விவசாயிகளின் பொது வேலை நிறுத் தத்துக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

புதிய வேளாண் சட்டங் களை திரும்பப்பெறக் கோரி டில்லி எல்லையில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் 120 நாட்களை எட்டிய நிலையில், நேற்று (26.3.2021) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங் கள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்த வேலை நிறுத்தத் துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 26.3.2021 அன்று வெளியிட்ட சுட்டுரைப் பதி வில், அராஜகங்கள், அநீதி, ஆணவத்தை சத்தியாகிரகம் தான் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று இந்தி யாவின் வரலாறு காட்டுகிறது.

விவசாயிகளின் போராட் டம் தேசிய நலன் சார்ந்த தாகவும், அமைதியானதாக வும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments