ஜெயங்கொண்டம் தி.மு.க. வேட்பாளருக்கு கழகத்தினர் வாழ்த்து

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தி.மு. வேட்பாளர் .சொ..கண்ணன், திராவிடர் கழக பொறுப்பாளர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். அவருக்கு கழகத்தின் வெளியீடாகிய தி.மு.. கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் - பா... .தி.மு. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் - ஏன்? என்ற புத்தகம் வழங்கப்பட்டது.தி.மு.. சட்ட திட்டக் குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் உடனிருந்தார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் .சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் .கார்த்திக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .செந்தில் உள்ளிட்டவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். (13.3.2021)

Comments