இந்தியாவில் புதிய இருமுறை உருமாறிய கரோனா கண்டுபிடிப்பு

மத்திய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி, மார்ச் 26- இந்தியா வில் புதிய இருமுறை உருமா றிய கரோனா கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகா தாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் காணப்படும் கரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக, 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை (இன் சாகாக்) மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கி யது. அந்த ஆய்வுக்கூடங்களில் கரோனா வகைகளை மர பணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனுப்பி வைத்த 10 ஆயிரத்து 787 கரோனா உறுதி செய்யப் பட்ட மாதிரிகள் ஆய்வு செய் யப்பட்டன. அதில், இதுவரை 771 உருமாறிய கரோனாவை இன்சாகாக் குழுமம் கண்டு பிடித்துள்ளது. இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தை சேர்ந்த உருமாறிய கரோ னாவை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கரோனாவையும், ஒரு மாதிரி, பிரேசில் உருமா றிய கரோனாவையும் சேர்ந் தவை. 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கரோனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதே சமயத்தில், பன் னாட்டு பயணிகள், அவர்களு டன் தொடர்பில் இருந்தவர் கள் ஆகியோரிடம் பெறப் பட்ட மாதிரிகளிலும் மர பணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில், புதிய இருமுறை மரபணு உரு மாறிய கரோனா கண்டுபிடிக் கப் பட்டுள்ளது. இந்த வகை கரோனா, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவை, தொற்றை அதிகப்படுத்தக் கூடியவை.

15 முதல் 20 சதவீத மாதி ரிகளில் இந்தவகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கரோனாக்களு டன் ஒத்துப்போகாமல், இவை புதிய ரகமாக காணப்படுகின் றன.

மராட்டியம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இவை கண்டறியப்பட்டுள் ளன. இங்கிலாந்து, டென் மார்க், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகளிலும் இவை கண்டறி யப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தியாவில் சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு இந்த மரபணு உருமாறிய கரோனாக்கள்தான் காரணமா என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைக்க வில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments