பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சரமாரி அடி; பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆவேசம்....

சண்டிகர், மார்ச் 29 விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக தலைவர்களின் வீடுகள் முன்பான போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக பஞ்சாப் மாநில பாஜக பிரமுகர்களைப் புறக்கணிப்பு செய்யும் போராட்டமும் அறிவிக்கப்பட் டுள்ளது.இதனிடையே, பஞ்சாப் மாநிலம், முக்த்சர் மாவட்டம்மாலவுட்பகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் நரங் என்பவர், 27.3.2021 அன்று செய்தி யாளர்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது விவசாயிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பு நடக்கும் இடத்தில் குவிந்த விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர் அருண் நரங் வந்தவுடனேயே அவரை சூழ்ந்துகொண்டு, அவர் மீதும் அவரது கார் மீதும் கறுப்பு மையை ஊற்றித் தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பாராத அருண் நரங், அருகிலுள்ள தேநீர் கடைக்குள் ஓடி தப்பித்தார். எனினும் அவர் மீண்டும் வெளியே வரும்வரை காத்திருந்த விவசாயிகள், காவல்துறையினர் அவரை வெளியே அழைத்து வந்ததும், மீண்டும் சரமாரியாக அடித்துத் தாக்கினர். ஆடைகளையும் கிழித்தெறிந்தனர். இந்தச் சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநி லத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகவே பாஜக தலைவர்கள் வெளியில் சகஜமாக நடமாட முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image