தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து

தூத்துக்குடி, மார்ச் 15- தூத்துக்குடி திமுக வேட்பாளராக கீதாஜீவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் இரா.ஆழ்வார் தலை மையில் கழகப் பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். .செல்வராஜ், செல்லத்துரை, மேனாள் மாவட்ட செயலாளர். .சக்திவேல், மாநகர செயலாளர் மணிமொழியன், .அறிவன், .இனியா, புதுக்கோட்டை முருகன், பழனிச்சாமி மற்றும் தோழமை கட்சியினர் உடனிருந்தனர்.

Comments