மியான்மாவில் இராணுவ சட்டம் அமல்

யாங்கூன், மார்ச் 17- தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மாவில் ஜன நாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

மேலும் நாடு முழுவதும் ஓராண் டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது. ஆங் சான் சூகி உள் பட முக்கிய அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள னர். மியான்மா இராணுவத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

மக்களின் தன்னெழுச்சிப் போராட் டத்தை மியான்மா இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதேபோல் போராட்டக்காரர் கள்மீது இராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும் தொடர் கிறது. நேற்று நடைபெற்ற போராட் டத்தில் இராணுவம் நடத்திய துப் பாக்கிச்சூட்டில், போராட்டக்காரர் கள் 38 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, மியான்மா இராணுவத்துக்கு சீனா  ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டு நிறு வனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து,  வன் முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியான்மா அரசை கேட்டுக் கொண்ட சீன தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட் பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என் றும் வலியுறுத்தியது. மேலும் மியான் மாவில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட வேண்டும் என்று மியான்மா இராணுவத்தை சீனா வலி யுறுத்தியது.

சீன அரசின் இந்த கோரிக்கையை தொடர்ந்து யாங்கூனின் ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா நகரங்களில் இராணுவ சட்டம் அமல்படுத்துவதாக இராணுவம் அறிவித்துள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.‌

Comments