அஞ்ஞானத்தின் பகையான விஞ்ஞானி

 ஆகஸ்ட் 1947ஆம் ஆண்டில் இந்தியத் துணைக்கண்டம் நாட்டின் விடுதலை என்ற காற்றை சுவாசிக்க துவங்கியது. மனித இனமே வாழ உதவும் உயிர்க்காற்றை (OXYGEN-O2)ஆய்வு மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் முதல் தேதி 1774ஆம் ஆண்டு. நாம் சுவாசித்து வாழும் இந்த காற்றை ஆய்வு மூலம் கண்டவர் ஜோசப் பிரிஸ்ட்லி. இங்கிலாந்து பிரபு ஷெல்பர்ன் என்பவரின் ஆதரவாலும், உதவியாலும் பிரிஸ்ட்லி தன்னுடையபேஉட்இல்ல ஆய்வுக்கூடத்தில் ஆய்வை மேற்கொண்டார்.

அவரின் ஆய்வுக்கூடத்தில் பாதரச ஆக்ஸைட் வேதிப் பொருளை, சூரிய ஒளியை ஓர் ஆடியின் (LENS) மூலம் செலுத்தி சூடேற்றிய போது. நிறமற்ற. எந்த மணமுமற்ற ,சுவையற்ற வாயு வந்தது. அது அவரின் நுரையீரலை மென்மையாக ஆக்குவதை உணர்ந்தார். இந்த வாயுவை தூய்மை நிலையில் உட்கொண்டால் பெரும் பலன் என்று கருதினார். மேலும் பல பயன்பாட்டில் உள்ள கண்டுபிடிப்புகளை கண்டறிந்தாலும், உயிர்க்காற்று கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெற்றது.

வேதியியல் ஆய்வு நீங்கலாக, பிரிஸ்ட்லியின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கவை. ஆங்கில மொழியை, லத்தீன் மொழியின் பிடியிலிருந்து விடுவிக்கும் மொழிப்பற்றினால், ஆங்கில மொழியின் அடிப்படை இலக்கணம் என்ற நூலை எழுதினார்.

அடுத்து, ஆன்மிகத் துறையில் அவர் ஈடுபட்ட புரட்சி செயல் பாராட்டத்தக்கது. ரோமானிய கிறிஸ்தவ ஆதிக்கத்தை எதிர்த்த புராட்டஸ்டென்ட் பிரிவில் கிளைத்த, ஒரே கடவுள் என்ற பிரிவு, 18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து, அமெரிக்கா, அய்ரோப்பா, இந்தியா நாடுகளில் பரவியது.

பிரிஸ்ட்லி உயிர் வாயுவை கண்டுபிடித்த ஆண்டில் கிறித்துவ ஒரே கடவுள் கொள்கைப் பிரிவு பற்றாளர் லண்டனில் தேவாலயம் ஒன்றை நிறுவினர். மத வெறுப்பாளரும் சீர்த்திருத்த சிந்தனையாளருமான பிரிஸ்ட்லி, மதச்சடங்குகள், தேவாலய வழிபாட்டு முறைகள் என்ற மூடப்பழக்கங்களிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மத அமைப்பு முறையிலிருந்து மானுடம் விடுதலைப் பெற வேண்டும் என்ற கொள்கையாளர்.

ஜோசப் பிரிஸ்ட்லியின் 100 ஆண்டு நினைவு நாளையொட்டி 1833ஆம் ஆண்டில் மின்காந்தத்துறை விஞ்ஞானி மைக்கேல் ஃபேரடே வெளியிட்ட செய்தி, அறிவியல் ஆய்வாளர் பகுத்தறிவுவாதியாக விளங்கினார் என்பதை படம்பிடித்து காட்டுவதாக உள்ளது.

பிரின்டிலி மற்றவர் பின்பற்றத்தக்க முன்மாதிரி மனிதர், அதாவது சிந்தனையில் சுதந்திரம், நம்பிக்கை கோட்பாட்டிலிருந்து விடுதலை, ஆதாரமில்லாமல் நம்பும் போக்கு போன்றவற்றில் மனிதர் சிக்கி மேலும் மேலும் நம்பிக்கைப் பாதையில் பயணம் செய்வதிலிருந்து விடுதலை பெற வேண்டும்

- நன்றி: “தி ஹிந்து” 18.8.2019

மு.வி.சோமசுந்தரம்

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image