புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் துரை.கி.சரவணனை ஆதரித்து தேர்தல் பரப்புரை

கீரப்பாளையம், மார்ச் 30- புவனகிரி சட்ட மன்ற வேட்பாளர் துரை. கி.சர வணனை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் கீரப்பாளையம் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கெள்ளப்பட்டது.

கீரப்பாளையம் ஒன்றிய திமுக செய லாளர் வி.ஜி.பி.சபாநாயகம் பிரச்சாரத் தைத் தொடங்கி வைத்தார். கீரப்பாளை யம் கடைவீதி, எண்ண நகரம், செட்டி குளம், வாள் காரமேடு, கண்ணன்குடி, பண்ணப்பட்டு, ஆடூர், அய்யனூர், தேவன்குடி, விளாகம், பரிவிளாகம், நெடுஞ்சேரி, மணலூர், மடப்புரம், சேதியூர்,  தரசூர், நார்த்தங்குடி, ஒடாக்க நல்லூர், வடப்பாக்கம், வாக்கூர், பூந் தோட்டம் முதலிய ஊர்களில் பிரச் சாரம் முடித்து மதுராந்தக நல்லூரில் திமுக ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட துணைத் தலைவர் பெரியார்தாசன், மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கு.தென்ன வன், இளைஞரணி செயலாளர் சுரேஷ், இளைஞரணி சிலம்பரசன், மாவட்ட ..தலைவர் அசோகன், மாவட்ட .. செயலாளர் கோ.நெடுமாறன், ஆசீர் வாதம் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Comments