மாட்டுக்கறி - ஏற்றுமதி செய்வோர் யார்? நன்கொடை வாங்குவோர் யார்?

 தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்ப தாக பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் இந்தியாவின் மிகப் பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத் திடமிருந்து ரூ.2.5 கோடியை நிதியாக பெற்றது மோடி கட்சி.

மும்பையில் இயங்கும் அல்லானா சன்ஸ் நிறுவனம், பிரிகோரி பிகோ அல்லானா போன்ற சில நிறுவனங் களை நடத்தி வருகிறது.

உலக அளவில் பெரிய மாட்டு இறைச்சி ஏற்றுமதி நிறுவனம் இது.

இந்நிறுவனத்திடமிருந்து  இரண்டரை கோடி ரூபாய் நிதி வாங்கியதாக தேர்தல் ஆணை யத்தில் வாக்குமூலம்  கொடுத் துள்ளது பாஜக..

இந்தியாவில் இயங்கும் சுமார் 75  மாட்டிறைச்சி  ஏற்றுமதி நிறுவனங்களிலிருந்தும் சிறிய, பெரிய அளவில் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.

மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழி லில் இஸ்லாமியர் மட்டுமல்ல, பல பெரும் இந்து தொழிலதிபர் களுமுண்டு.

அல் கபீர் எக்ஸ்போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட். இதன் முத லாளி  சதீஷ் சுபர் வால் இந்துவே!

அரேபியன் எக்ஸ்போர்ட் முதலாளி சுனில் கபூர்.எம்.கே.ஆர், ப்ஃரேஷன் நிறுவன முதலாளி மதன் ஏவாட்.

தமிழகத்தில் இயங்கும் அஸ்வினி அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் என்கிற தமிழர்.

இப்படி இன்னும் பல இந்துக்கள் மாட்டைக் கொன்று ஏற்றுமதி செய்யும் முதலாளிகளே.

நவீன இயந்திரங்கள் மூலம் மாடுகளை வெட்டும்மிகப்பெரியதொழிற்சாலைகள்  இவர்கள் கையில்.

அல்கபீர் உள்ளிட்ட பல இஸ்லாமிய பெயர்களில் இந்துக்கள்  மாட்டிறைச்சி வணிகத் தில் கொடி கட்டிப் பறக்கின்றனர்..

இந்த இந்து முதலாளிகள் தொழில் வேறு - மதம் வேறு தொழிலை மதத்தோடு சேர்க்க வேண்டாம் என்கின்றனர்.

பெயருக்கு வேலைக்கு  இஸ் லாமி யரை வைத்துக் கொண்டு இஸ்லாமிய பெயர்களால் மாட்டி றைச்சி தொழிலில் பல மில்லியன் ரூபாய் கல்லா கட்டுகிறார்கள்.

அமெரிக்கா, அய்ரோப்பிய  நாடுகள் இந்திய மாட்டிறைச்சியை வாங்குகின்றன.

அமெரிக்கா,ஸ்பெயின் போன்ற நாடுகளில் சராசரி தனி மனித நுகர்வு 100 கிலோ.

இந்தியாவில் ஒரு தனி மனிதன் ஆண்டு முழுவதும் சேர்த்து இறைச்சி நுகர்வு வெறும் 5 கிலோ தான் உண்கிறான்.

அமெரிக்கா  இந்தியாவிலிருந்து  மாட்டிறைச்சி யை மெடடோ நிறுவனம் பெப்ஸிகோ நிறுவனம்  மூலம் இறக்குமதி செய்கிறது.

இந்நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த இந்திரா கிருஷ்ணநூயி என்ற பார்ப்பனப் பெண்ணே.

எகிப்து, மலேசியா உள்ளிட்ட பல  அரபு நாடுகளுக்கு இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குப் பல லட்சம் மாடுகள் அறுவைக்கு கடத்தப்படு கின்றன.

மேற்கண்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதியும் செய்யப்படுகிறது.

பசு இறைச்சியோ, காளைக் கறியோ ஏற்றுமதி செய்வதில்லை, எருமைக் கறி மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பச்சைப் பொய்  புளுகுகிறார்கள்.

உலகத்தில் 22.44 கோடி  எருமை மாடுகள் உள்ளன. அதில் 11.33 கோடி எருமைகள் இந்தியா வில் தான் உள்ளன.

உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கிடைப்பது 10.95 பில்லி யன் டாலர்  வருமானம்.

கடந்த ஆண்டு இந்தியா மாட்டிறைச்சி மூலம் பெற்றது 3 பில்லியன் டாலர்.

உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய் யும் நாடுகளில்  இந்தியா மூன்றாவது இடத்தில்..

பாஜக ஆட்சிக்குப் பிறகு மாட்டிறைச்சி ஏற்றுமதி பெரும்பகுதி கூடியிருக்கிறது.

இந்தியாவில்உள்ளபசுபாதுகாப்பு 

கோசாலைகளில் 5 சதவீத பசுக்களும் காளை களும் உள்ளன.

மற்றவைவெட்டப்பட்டுவெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படு வதே ஜரூரான தொழிலாக நடை பெற்று வருகிறது.

பசு கடவுளின் அவதாரம் என்று சொல்லும் பாஜக அரசு.

உள்நாட்டில் ஆட்டுக்கறியைத் தின்றாலும் பசுவை கொன்றதாக பசு பாதுகாவலர்கள் மூல மாக சிறுபான்மையினரைக் கொல்லுகிறார்கள்.

அந்த பசுக்களை வெட்டி வெளி நாட்டுக்கு அனுப்பி காசு பார்க்கும் கும்பலிடம் தேர்தலுக்கும் கட்சிக்கும் நிதி வசூலிப்பதே பாஜகவின் பசுவின் ரத்தம் குடிக்கும் செயல்.

இந்துத்துவா வெறி

பாஜகவினர்  பசு மாட்டை பாதுகாப்போம் என்ப தெல்லாம் முதலாளிகளுக்கு சாதகமான அரசியல் வேட்டை ஆடுவதற்கே!

-James Navayugan  முகநூலிலிருந்து

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image