கும்பகோணத்தில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு - தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் -தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்

கும்பகோணம், மார்ச் 12, கும்ப கோணத்தில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மார்ச் 13  நடைபெறு

கிறது.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

13.03.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு கும்பகோணம் காந்தியடிகள் சாலை ராயா மகால் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் திராவிடர் கழக செயலவைத் தலைவர்  சு.அறிவுக்கரசு அவர்கள் தலை மையில் நடைபெறுகிறது.

திராவிடர் கழகத்தலைவர், தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார். நடை பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திராவிடர் கழக நிலைப்பாடு மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வுள்ளன. தமிழகம் முழுவதிலிருந்து திராவிடர் கழக தலை மைச்செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர், செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

13.03.2021 சனி மாலை 6 மணியளவில் கும்பகோணம் கடலங்குடி தெருவில் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற வுள்ளது. கும்பகோணம் (கழக) மாவட்ட செயலாளர் சு.துரைராசு அனைவரையும் வரவேற்று உரையாற்றுகிறார்.

கும்பகோணம் (கழக) மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலை மையுரையாற்றுகிறார். திராவிடர் கழக காப்பாளர்கள் இராசகிரி கோ.தங்கராசு, வெ.ஜெயராமன், மண்டலத் தலைவர் மு. அய்யனார், மண்டல செயலாளர் .குரு சாமி, மாவட்டத் தலைவர்கள் தஞ்சை சி. அமர்சிங், மன்னை ஆர்.பி.எஸ். சித்தார்த் தன், அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்டச் செயலாளர்கள் உரத்தநாடு .அருணகிரி, பேராவூரணி வை.சிதம் பரம், மன்னை கோ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் வை. இளங்கோவன், சு.விஜயகுமார், .சிவக்குமார், குடந்தை நகரத்தலைவர் கு.கவுதமன், பகுத்தறி வாளர் கழக மாவட்டத்தலைவர் ஆடிட் டர் சு.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றுகின்றனர்.

 கழகத் தலைவர் சிறப்புரை

கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்று கிறார்கள்.

திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு , பொதுச்செயலா ளர்கள் துரை. சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், பொருளாளர் வீ.கும ரேசன், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், பிரச்சார செயலாளர் . அருள் மொழி, துணைப்பொதுச்செயலாளர் . இன்பக்கனி , அமைப்பு செயலாளர்கள் வே.செல்வம், ஊமை . ஜெயராமன், ஈரோடு .சண்முகம், வி.பன்னீர்செல்வம், வெளி யுறவு செயலாளர் கோ.கருணாநிதி, இளை ஞரணி செயலாளர் . சீ.இளந்திரையன், மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என் னாரசு பெரியார், மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மகளிர்பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை, வழக்குரைஞரணி தலைவர் . வீர சேகரன், மகளிர் பாசறை அமைப்பாளர் சே .மெ.மதிவதனி, தொழிலாளரணி செய லாளர் மு. சேகர், விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா. கோபால், கிராம பிரசாரக் குழு மாநில அமைப்பாளர் அதிரடி. அன் பழகன்,   மகளிரணி மாநில அமைப் பாளர்கள் கிருஷ்னேஸ்வரி, தேன்மொழி, அகிலா எழிலரசன், பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர் மா.அழகிரிசாமி, பொதுச் செயலாளர்இரா.தமிழ்ச்செல்வன், காப்பாளர் பொத்தனூர் .சண்முகம், கழக மாவட்ட அமைப்பாளர் . அழகுவேல், மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் . அஜிதன், மாவட்டத் துணைத்தலைவர் வலங்கை கோவிந்தன், மாவட்டத் துணைச் செயலாளர் . தமிழ்மணி, ஒன்றியத் தலைவர்கள், ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள்.

கும்பகோணம் பெருநகர செயலாளர் வழக்குரைஞர் பீ. இரமேஷ் நன்றி கூறு கிறார். முன்னதாக மாலை 5 மணியளவில் உறந்தை கருங்குயில் கணேஷ் தெற்கு நத்தம் சித்தார்த்தன் குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சியும், குடந்தை ராணிகுரு சாமியின் அறிவு பரதநாட்டிய பள்ளியின் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கும்ப கோணம் மாவட்ட திராவிடர் கழக பொறுப் பாளர்கள் செய்து வருகின்றனர்.

Comments