தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சேலத்தில் தெரிவித்த யோசனை ஆக்கப்பூர்வமானது - அந்த விதை முளைத்துப் பயிராக செழிக்கட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 30, 2021

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சேலத்தில் தெரிவித்த யோசனை ஆக்கப்பூர்வமானது - அந்த விதை முளைத்துப் பயிராக செழிக்கட்டும்!

 தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் வழிகாட்டுகிறது

இளம் தலைவர் ராகுல்காந்தி முயற்சி செய்து இந்திய அளவில் பாசிசத்தை எதிர்த்து வெற்றிக் கூட்டணி அமைத்திடுக!

சேலம் செயலாற்றும் காலம்'  என்ற அண்ணாவின் மேற்கோளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய  அறிக்கை!

சேலத்தில் கடந்த 28 ஆம் தேதி  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில், பாசிச சக்திகளை எதிர்த்து, தமிழ்நாட்டைப் போல அகில இந்திய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி முயற்சி செய்ய தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள் மிகவும் சிறப்பானது - தேவையானது. அது நல்ல பலனைக் கொடுக்கும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

'சேலம் செயலாற்றும் காலம்' என்ற அண்ணாவின் 1944 ஆம் ஆண்டு எழுத்தோவியமும், நீதிக்கட்சி என்ற ஜஸ்டீஸ் கட்சிக்கு இருந்தமேட்டிமை' தோற்றமும், ஆதிக்கமும் மாற்றப்பட்ட சாமானியர்கள் சரித்திரம் படைக்க, அறிஞர் அண்ணா பெயரிலேயே தீர் மானம் நிறைவேற்றி, புதிய திருப்பத்தை ஏற்படுத்திய நகரம் அது!

அதுமட்டுமா?

1971  ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார் அவர்கள் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டினையொட்டிய ஊர் வலத்தில், தந்தை பெரியார்மீது பாரதீய ஜனசங் - காவிகள் வீசிய செருப்பு ஏற் படுத்திய எதிர்விளைவும், அதன்மூலம் இராமனைக் காட்டி - பக்திப் போதையை யூட்டினால், தி.மு..வைத் தோற்கடிக்க முடியும் என்று ஆரியம் வகுத்த வியூகம் படுதோல்வி அடைந்து முதல்வர் கலைஞர் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 138-லிருந்து 184 ஆக உயர்ந்தது.

1971 தேர்தலின் முடிவில் ஆச்சாரியார் எழுதியது என்ன?

''இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்துவிட்டது'' (‘கல்கி', 4.4.1971) என்று  வருணாசிரமக் காவலர் ராஜ கோபாலாச்சாரியார்கல்கி' ஏட்டில் தலையங்கம் எழுதியபோது, திருவல்லிக் கேணி தொகுதியில் வெற்றி பெற்ற நாவலர் இரா.நெடுஞ்செழியன், ‘‘எப்போது புறப்படப் போகிறீர்கள்? வழி யனுப்ப வரத் தயாராக உள்ளோம்!'' என்று தோள் தட்டி முழங்கியது பழைய 1971 ஆம் ஆண்டைய வரலாறு!

அதற்கு 50 ஆண்டுக்குப் பிறகு, இப் போதும் அதே வரலாறு புதிய வேகத்துடன் திரும்பத் தொடங்கி, திராவிடம் என்ற சமதர்ம, சமூகநீதி, சுயமரியாதை லட் சியங்களின் வெற்றி- தி.மு.. கூட்டணி யாக ஒளிவீசி, உதயசூரியன் தன் கதிர்களை பரப்ப ஆயத்தமாகியுள்ளது!

1971 இல் முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த சாதனை எத்தகையது?

அண்ணா காலத்தில், 138 இடங்கள் கிடைத்தன என்றால், கலைஞர் காலத்தில் 184 ஆக உயர்ந்து வெற்றி வாகை சூடியது.

2021 தேர்தலில் அதையே தாண்டும் புதிய ராக்கெட் வேக வெற்றியை கலைஞருக்குப் பின் தி.மு.. தலைவராகி, உழைப்பின் உருவாகவும், பண்பின் பெட்டகமாகவும், செயலில் செயற்கரிய ஆளுமையுமாகிய சகோதரர் தளபதி மு..ஸ்டாலின், இந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் (2021) சாதித்து காட்டவிருக்கிறார் என்பதை 28.3.2021 அன்று சேலத்தில் தி.மு.. கூட்டணித் தலைவர்களை இணைத்துஉள்ளத்தால் ஒருவரே மற்றவர் உடலினால் பலராய்க் காண்பர்' என்ற புரட்சிக்கவிஞரின் பொன் வரிகளை, பல லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் நிரூபித்துக் காட்டினார்!

மோடியை மறைத்து எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தும் பா...வின் பரிதாப நிலை!

தமிழ்நாட்டில் நம் தளபதி, ‘‘எப்படி சிந்தாமல் சிதறாமல், ‘செய்கூலி' இல் லாமல்'' ஒரு கொள்கைக் கூட்டணியை 2019 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே கட்டியதை, 2021 இல் அதை மேலும் லட்சிய ரீதியாகப் பெருக்கி, வரலாறு படைப்பார்! பிரதமர் மோடி படத்தைப் போட தமிழ்நாட்டில் போட்டியிடும் பா... வேட்பாளர்களே அஞ்சி நடுங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துடன் தங்களின் காவி முகத்தைப் புதைத்து, வாக்காளர்களை ஏமாற்ற எண்ணும் பரிதாப நிலை அல்லது தேர்தலில் சில இடங்களையாவது பெற - ஆர்.எஸ்.எஸ். கூட இந்த ‘‘யுக்திகளையும்'' வித்தைகளை யும் உருமாற்ற உபாயங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இது அப்பட்டமான கீழிறக்க நிலையல்லவா!

இதற்குக் காரணம் வலுவான பே(£)ராயுதம் பெரியார்  அல்லவா! தமிழ் மண்ணில் காவிப் பருப்பு வேகாது என்பது எப்படி யதார்த்தமாகி விட்டதோ, அதே நிலையை வடநாட்டிலும் - இந்தியாவின்  பிற மாநிலங்களிலும் ஏற்பட ஒரு கொள் கைக் கூட்டணியை சகோதரர் ராகுல் அவர்களே உருவாக்கிக் கட்டுங்கள்!

வெறும் 37% சதவிகித வாக்குகளை வாங்கி, பெருத்த மெஜாரிட்டி பெற்ற மோடி வித்தைகளுக்கு அரசியல் ரீதியாக முற்றுப்புள்ளி வைக்க முயற்சியை மேற் கொள்ளுங்கள்.

தளபதி மு..ஸ்டாலின் கூறிய அரிய ஆலோசனை

தமிழ்நாட்டை முன்னுதாரணமாக ஆக்கிக் கொண்டு இப்பணியை அகில இந்திய அளவில் தொடங்குங்கள் என்று நம் தளபதி ஸ்டாலின் அவர்கள், ராகுல் காந்தி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதற்குமுன் அடியெடுத்துக் கொடுத்த சில வரிகள் எனது சுருக்கமான உரையில் - ஆங்கிலப் பகுதியிலும் அமைந்தது.

சேலத்தில் விதைக்கப்பட்ட அரசியல் கொள்கைக் கூட்டணியை அனைத் திந்திய அளவில் கட்டியமைக்க ராகுல் தளபதியாகட்டும் என்பதைப் பொருத்த மான காலகட்டத்தில் அறிவித்து, நம் தளபதி போட்ட அந்த விதை முக்கிய மானது.

புதிய அணி உருவாகட்டும்!

இது விரைவில் முளைவிட்டு திரா விடப்  பயிர் விளைச்சலாக தருவதோடு, விஷப் பார்த்தினியமாகிய பா... - ஆர்.எஸ்.எஸை. இலட்சியக் களத்தில் தோற்கடிக்க, மக்களை அகில இந்திய அளவில் விழிப்புறச் செய்து ஒருங் கிணைப்பதற்கான நல்ல தொலை நோக் குடன் கூடிய அரிய யோசனை.

சமதர்மம், மதச்சார்பின்மை, சமூகநீதி, சுயமரியாதை, ஜனநாயகம் காப்பாற்றப் பட அகில இந்திய அளவில் புதிய அணியாக பூபாளம் பாட சேலம் உரை செயல் வடிவம் பெறட்டும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

30.3.2021

No comments:

Post a Comment