ஜோதிடர் கூறியதால் மகனைக் கொன்ற அவலம் நரபலிகளுக்கு இனி இடம் தரக் கூடாது

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அறிக்கை

சென்னை,மார்ச் 4- திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் முகநூல் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது: தன்னுடைய மகனால் எதிர் காலத்தில் தனக்கு ஆபத்து நேரலாம் என்று ஜோதிடர் கூறியதால், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த தந்தை தனது 5 வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றிருப்பது கடும் அதிர்ச் சியையும் வேதனையையும் அளிக் கிறது. இதன் உண்மைத் தன்மையை காவல்துறையினர் விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நரபலி களுக்கு இனி இடம் தரக் கூடாது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

- என்ற வள்ளுவப்பெரியார் வரிகளை மனதில் கொள்வோம்.

Comments