படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் தண்டிக்கும் பா.ஜ.க. அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 19- பாஜக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் தண்டிப்ப தாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

நாட்டில் வேலை இல்லா தத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.  கரோனா பொது முடக்கத்தால் அது பன் மடங்கு அதிகரித்துள்ளது.  பல படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.  அதே வேளையில் மத்திய பல்கலைக்கழகங்கள், அய். அய்.டிக்கள் போன்ற பல கல்வி நிலையங்களில் ஏரா ளமான காலி இடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படா மல் உள்ள நிலையும் இங்கு உள்ளது.

17.3.2021 அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரையில், நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் கடுமை யான வேலையில்லா திண் டாட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். உண்மையான பட்டங்களை வைத்திருப்ப தால் படித்த இளைஞர்களைக் குறிப்பாக இதர பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட பழங் குடியினர் பிரிவினரை அரசு தண்டிப்பதாகத் தெரிகிறது எனப் பதிவு இட்டுள்ளார்.

அத்துடன் தனது பதிவில் மத்திய பல்கலைக்கழகங்கள், அய்.அய்.டிக்களில்  காலியாக உள்ள பணியிடங்கள் பட்டி யலை இணைத்து அய்.அய். எம்.களில் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப் பட்டோர் ஆகியோருக்கான இடங்கள் காலியாக உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

ஏற்கெனவே  பல மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் போலி பட்டங் களைக் கொண்டுள்ளதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில் ராகுல் காந்தி உண்மையான பட்டம் எனக் குறிப்பிட்டுள்ளது குறிப்பி டத்தக்கதாகும்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image