வேலைவாய்ப்பு எண்ணிக்கை உயரவில்லை ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த இந்திரேஷ் குமார் ஒப்புதல்

 ராஞ்சி, மார்ச் 16- ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஆர் எஸ்எஸ்சைச் சேர்ந்த இந்தி ரேஷ் குமார் கூறுகையில், "இந்த பூமி நமக்கு அருளிய வளங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது. ஆனால் மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தற்போது இந்தியாவில் உலக மக்கள் தொகையில் 16.5% மக்கள் உள்ளனர். ஆனால், இங்குள்ள நிலப் பரப்பு வெறும் 3.5%. மண் ணின் மீதும் வளத்தின் மீதான அழுத்தம் இது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலை விரித்தாடுகிறது. வேலை வாய்ப்பு எண்ணிக்கை உயர வில்லை. ஆனால், மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. அரசாங்கம் மட்டுமல்ல மொத்த அரசியல் அமைப்புகளும், கட்சிகளும் மக்கள் தொகை குறைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். இரு குழந்தைகள் திட்டத்தை அப்போதைய இந்திரா காந்தி தலைமையி லான ஆட்சி நடைமுறைப் படுத்தியது. எதிர்க்கட்சிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தன.

இப்போதைய சூழலில் மக்கள் தொகை பெருக்கம் இந்தியாவுக்கும், உலகிற்கும் பெரிய சவாலாக இருக்கிறது. மத பேதமின்றி மக்கள் தொகை கட்டுப்பாட்டு நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments