உலகெங்கிலும் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்: உலக சுகாதார அமைப்பு தகவல்


 ஜெனீவா, மார்ச் 11 உலகெங்கிலும் மூன்றில் ஒரு பெண் தனது வாழ் நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளா கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் மேற்கண்ட  தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பாலியல் வன்முறைகளை 20 வயது அடையும் முன்னரே தங்களுக்கு நெருக்கமான உறவுகளால் பெண்கள் அனுபவிக்க நேரிடுகிறது என்றும் ஆய்வு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 85 கோடியே 20 லட்சம் பெண்கள் தங்கள் 15 வயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் படுவதாகவும், உலகளவில் கிரிபாட்டி, பிஜி, பப்புவா நியூ கினியா, வங்காளதேசம், காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் பொலிவியா போன்ற நாடு களில் அதிகளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் காணப்படுவ தாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 2010 முதல் 2018 ஆம் ஆண்டு வரை இல்லாத அளவிற்கு கரோனா கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ள தாகவும் ஆய்வு சொல்கிறது. அர சாங்கம் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது குடும்ப வன்முறைக்கு மிகப்பெரிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 15 --முதல்  49 வயதுடைய பெண்கள் அதிகளவு தங்கள் இணையால் வன்முறைக்குட் பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இத்தகைய வன்முறை குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் பெண்களுக்கு அதிகம் ஏற் பட்டுள்ள தும், சில நாடுகளில் அனைத்து பெண்களிலும் பாதி பேர் பாலியல் வன்முறை கொடுமையில் உள்ளாக்கப் பட்டுள் ளார்கள் என்பதும் கசப்பான உண்மை. என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Comments