மயிலைப் பகுதியில் தேர்தல் பரப்புரை


26.3.2021 அன்று மாலை மயிலைத் தொகுதியை சேர்ந்த நொச்சி நகர், நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தென் சென்னை மாவட்ட  திராவிடர் கழகத்தின் சார்பில் மதச்சார்பற்ற அணியை சேர்ந்த மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.வேலுவை ஆதரித்து மாவட் டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் பரப்புரை நடைபெற்றது. திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் .மணியம்மை சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் செ.. பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணி தலைவர் .மகேந்திரன், செயலாளர் .மணித்துரை, .குமார், மு.சண்முகப்பிரியன், மாணவர் கழகச் செயலாளர் வி.விசுவாசு, தரமணி கோ.மஞ்சநாதன், சதீஷ், ஜவகர், செய.சொப்பனசுந்தரி, பி. அஜந்தா ஆகியோர் பங்கேற்றனர்.

Comments