மத்திய அரசு தலையீடு மாநிலங்களின் ஒற்றுமையைப் பாதிக்கும் பாஜக அமைச்சர் கருத்து

 பெங்களூரு, மார்ச். 28 மத்திய பாஜக அரசின் தலையீட்டால் மாநிலங்கள் ஒற்றுமை பாதிப்பு அடையும் என அதே கட்சியைச் சேர்ந்த கருநாடக அமைச்சர் மதுசாமி கூறி உள்ளார்.

மத்திய பாஜக அரசு ஒவ்வொரு மாநில விவகாரங்களிலும் தலையிடுவதால் பல பிரச்சினைகள் உண்டாவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றன.   இவற்றுக்கு மகுடம் வைத்தாற்போல் தற்போது பாஜகவை சேர்ந்த கருநாடக மாநில குறு நீர்ப் பாசன அமைச்சர் மதுசாமி இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் கருநாடக மாநிலத்தில் அதே கட்சியைச் சேர்ந்த குறு நீர்ப் பாசன அமைச்சர் மதுசாமி மைசூருவில் நடந்த அகில பாரதிய சாரண சரண சாகித்திய பரிசத் என்னும் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.   தேசிய ஒற்றுமை மற்றும் மண்டல சுதந்திரம் என்னும் பெயரில் நடந்த இந்த கருத்தரங்கில் மதுசாமி உரையாற்றினார். மதுசாமி தனது உரையில், “மத்திய அரசின் தலையீட்டால் மாநிலங்கள் இடையே உள்ள ஒற்றுமை பாதிப்பு அடைகிறது.   இதனால் மாநில பிரிவினை அதிக அளவில் வளர்கிறது.   இது குறித்து இதே நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பெங்களூரு தெற்கு மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூரியா நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்.

நாம் தற்போது தாராளமயமான முன்னேற்றத்தை எதிர்நோக்கி உள்ளோம்.  ஆனால் அது மய்யப்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது முன்னேறி வரும் மாநிலங் களையும் முன்னேற்றம் அடையாத நிலைக்கு அழைத்து வரும் வகையில் மத்திய அரசின் கொள்கைகள் உள்ளன.  முந்தைய இந்திரா காந்தி ஆட்சியில் இது  போல இருந்ததை நாமே விமர்சித்துள்ளோம்எனத் தெரிவித்தார். இது கருநாடக மாநில பாஜகவினரிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தேர்தலுக்கு முன்பே 3 தொகுதிகளை இழந்த கேரள பாஜக

திருவனந்தபுரம்,மார்ச். 28 கேரள சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக் கப்பட்டதால் அக்கூட்டணி 3 தொகுதி களை இழந்துள்ளது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று கேரள சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  தமிழகத்தைப் போல் இங்கும் ஒரே கட்டமாக மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட், மற்றும் பாஜக என மூன்று அணிகள் களத்தில் உள்ளன. இங்கு வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது தலசேரி, குருவாயூர் மற்றும் தேவிகுளம் ஆகிய 3 தொகுதிகளில் பாஜக கூட்டணி உறுப்பினர்களின் மனு நிராகரிக்கப்பட்டன.   இரு தொகுதிகளில் பாஜகவும் தேவிகுளம் தொகுதியில் அதிமுகவின் தனலட்சுமியும் வேட்பு மனு அளித்திருந்தனர்.

மேலும் இத்தொகுதிகளில் இக்கட்சியினர் அளித்திருந்த டம்மி வேட்பாளர் களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.   இந்த முடிவை எதிர்த்து தலசேரி வேட் பாளர் ஹரிதாஸ், குருவாயூர் வேட்பாளர் நிவேதிதா சுப்ரமணியம் மற்றும் தேவிகுளம் வேட்பாளர் தனலட்சுமி ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு அளித்த பிரமாண பத்திரத்தில் வேட்புமனு பரிசீலனையில் அதிகாரிகள் முடிவே இறுதியானது எனவும் 3 வேட்புமனுக்களும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.    இதை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனால் தற்போது பாஜக - அதிமுக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே அக்கூட்டணி 3 தொகுதிகளை இழந்துள்ளது.  தலசேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் 22 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.  எனவே பாஜக தனக்கு இங்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதி வந்தது குறிப்பிடத்தக்க தாகும்.

 

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image