செய்தியும், சிந்தனையும்....!

 இது திராவிடக் கட்சி!

*         ஜாதி, மத அடிப்படையில் மட்டுமே வாக்குகளை சேகரிக்கும் தி.மு..வைப் புறக்கணிக்க வேண்டும்.

- மத்திய (பா...) அமைச்சர் கிஷன் ரெட்டி

>>           தங்கள் மூலதனத்துக்கு ஆபத்து என்று கருதுகிறார்களோ - தி.மு.. என்ற திராவிடக் கட்சிக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது என்பது நினைவில் இருக்கட்டும்!

அதுதான் வேளாண் சட்டம் இருக்கிறதே!

*         நெல் கொள்முதல் மய்யங்களை தமிழக அரசு திறக்கக் கோரிப் போராட்டம்.

- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

>>           மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்கள் வரும்போது மாநில அரசு எப்படி இதனைச் செய்யும் - செய்யத்தான் முடியுமா?

திருப்பங்கள்!

*           தி.மு.. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது.

                 - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

>>           'ஆமாம்', நம்புங்கள்! எடுத்துக்காட்டு சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசம் (இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமையில் முதலிடம்).

எந்த ஆண்டவன்?

*           இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை .பி.எஸ்.             

- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

>>           ஆண்வன் .பி.எஸ்.தானே  - அதனைப் பறிமுதல் செய்தவர் அல்லவா .பி.எஸ்.

ஆரம்பித்துவிட்டார்களா?

*           மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தலில் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளில் முரண்பாடு.

>>           இது என்ன - இன்னும் போகப் போகத் தெரியும்.

2 கோடி பேருக்கு வேலை?

*           இளம் வாக்காளர்கள் திரளாக வந்து  வாக்களிக்க வேண்டும்.

- பிரதமர் மோடி வேண்டுகோள்

>>           இளைஞர்கள் பகோடா விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் - அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?

ஆம், வருணாசிரமம்!

*          மக்களைப் பிளவுபடுத்தவே சி... சட்டம்.

- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

>>           பிறப்பின் அடிப்படையிலேயே வருணா சிரமத்தைப் புகுத்தி - பிளவுபடுத்துபவர்கள் ஆயிற்றே.

Comments