தேர்தல் களத்தில்.....

 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021 

தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வேட்புமனுக்கள் ஏற்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் பெயர், சொத்துவிவரம், கடன் விவரம், கல்வி விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி.க்களின் வேட்புமனுக்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி திருச்செந்தூரை சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், வேட்புமனுக்கள் முறையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு  நேற்று (12.3.2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது, வேட்புமனுக்களை ஏற்கும்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல்முதல் நாளில்57 பேர் வேட்பு மனு தாக்கல்

தமிழக சட்டசபை தேர்தலில் நேற்று (12.3.2021) முதல் நாளில் 57 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (12.3.2021) காலை 11 மணிக்கு தொடங்கியது. அதிமுக சார்பில் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் முதல் நாளிலேயே வேட்பு மனு தாக்கல் செய்தார். திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட, பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கல்ச் செய்தார். மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல் நாள் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 56 ஆண்கள், ஒரு பெண் என மொத்தம் 57 பேர்  மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக போடிநாயக்கனூர் தொகுதியில் .பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மனு  தாக்கல் செய்துள்ளனர்.

 சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் .தி.மு.. சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை (மார்ச் 15) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதேபோல் மற்ற தொகுதிகளில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் திங்கட்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் தளபதி  மு..ஸ்டாலினும் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து, அன்றைய தினமே பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க வேண்டும்மு..ஸ்டாலின் வேண்டுகோள்

உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று திமுகவினருக்கு தளபதி மு..ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (12.3.2021) தொடங்கியது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் நேற்று (12.3.2021) வெளியிட்டார்.

இந்நிலையில் உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று சீட்டு கிடைக்காத திமுகவினருக்கு மு..ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சீட்டு கிடைக்காதவர்கள் பிடிவாதம் பிடிக்க கூடாது. பிடிவாதம் பிடித்தால், நெருக்கடி ஏற்படுத்தினால் அவர்கள் உடன்பிறப்புகள் என்ற தகுதியை இழந்து விடுவார்கள். பிடிவாதம் பிடிப்போரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கேள்விக்குள்ளாகி விடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், விருப்பமனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாக அறிவிக்க ஆசைதான். ஆசைகள் கடல்போல இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே. திமுக என்ற பெட்டகத்தில் உள்ள உடைகள் அனைத்தும் உயர்ந்தவை, தரமானவை, எழில் கூட்டுபவை. அதில் 173 உடைகளை மட்டுமே இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தியுள்ளேன். இன்னும் ஏராளமான, தரமான, பயன்தரத்தக்க உடைகள் நேர்காணலில் என்னை அலங்கரித்துள்ளன.

இன்னும் பல களங்கள், வாய்ப்புகள் உள்ளதால் உரிய முறையில் அப்போது பயன்படுத்திக் கொள்வேன். வெற்றியன்றி வேறில்லை என்ற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். மாச்சாரியங்களுக்கு இடங்கொடாமல், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியை ஈட்ட களப்பணியாற்றுவோம். வெற்றியை எளிதாக அடைய விடமாட்டார்கள். சூழ்ச்சி செய்வார்கள். அதிகார பலம் கொண்டவர்களின் ஜாதிகளையும், சூழ்ச்சிகளையும் முறியடிக்க உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

பேட்டி

தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர் என்று திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் வர்ணித்துள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 173 தொகுதிகளில் திமுகவும், 61தொகுதிகளில் தோழமைக் கட்சிகளும்போட்டியிடுகின்றன. தோழமைக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்த நிலையில், திமுக போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு..ஸ்டாலின் அவர்கள் நேற்று (12.3.2021) அறிவாலயத்தில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் ஹாட்ரிக் சாதனை படைக்க உள்ளார். திமுகபொதுச் செயலாளர் துரைமுருகன் இம்முறையும் தனது சொந்த தொகுதியான காட்பாடியிலேயே போட்டியிடுகிறார். முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் முதன் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண்கிறார்.வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதிமுக தலைவர் மு..ஸ்டாலின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல; தேர்தல் கால கூட்டணிஅல்ல; கொள்கைக் கூட்டணி. கொள்கை நட்பால் உருவான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை முடிந்துவிட்டது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும், .தி.மு., கொ..தே., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி (2ல் ஒரு இடம்), பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை,மக்கள் விடுதலை கட்சி ஆகியவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதன்படி உதய சூரியன்சின்னம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது.10 ஆண்டுகளாக பாழ்பட்டு நிற்கும் தமிழகத்தின் புதிய விடியல் காண இந்த தேர்தல் களம் காண்கிறோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது வேட்பாளர் பட்டியல் அல்ல; வெற்றி பெறுவோர் பட்டியல்.

1971ஆம் ஆண்டு 184 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அந்தசாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. அந்தச் சாதனையை திமுக-வே முறியடிக்கும். கழக ஆட்சி அமைப்போம் என்ற சிந்தனையோடு, நடைபெற உள்ள ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலில் ஊடகங்கள் நெறிமுறைகளோடு செயல்பட்டு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments