நன்கொடை

* மதுரை பெரியார் பெருந் தொண்டரும். ஆயுள் காப்பீடு கழகத்தில் துணை மேலாளராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவருமான .காசிவிஸ்வநாதன் அவர்களின் 81ஆவது பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் இல்லத்திற்கு ரூ.1000மும், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500ம்   அவரது துணைவியார் ராஜம்காசி விஸ்வநாதன், சகோதரர் அங்கமுத்து குடும்பத்தினரும், அமைப்பு செயலாளர் வே.செல்வத்திடம் வழங்கினார்கள்.

* பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு- நே.சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 29ஆம் ஆண்டு தொடக்க நாள்(20.03.2021) மகிழ்வாக,திருச்சி நாகம்மைய்யார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக அளிக்கப்பட்டது. நன்றி, வாழ்த்துகள்!

Comments