நனவானது சிறுவயது கனவு: ஒலிம்பிக்கில் தமிழக வீரர் சத்யன்

தோஹா,மார்ச்20- டோக்கியா வில் நடைபெற உள்ள ஒலிம் பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் விளையாட தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தகுதிப் பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதம் டோக்கியோ வில் தொடங்குகிறது. அதில் டேபிள் டென்னிஸ் பிரிவு களில் விளையாடுவதற்கான ஆசிய அளவிலான தகுதிச்சுற் றுப் போட்டி கத்தாரிலுள்ள தோஹாவில் நடக்கிறது.

இதன் ஒற்றையர் பிரிவு 2ஆவது போட்டியில் சத்யன் ஞானசேகரன்பாகிஸ்

தான் வீரர் முகமது ரமீசை எதிர்கொண்டார். அந்தப் போட்டியை 11-5, 11--8, 11--9, 11--2 என்ற புள்ளி கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால் 4---0 என  நேர் செட்களில்  வென்றார்.

ஏற்கெனவே முதல் போட் டியில் சக வீரர் சரத் கமலை 4--3 என்ற செட்களில் வென்றிருந்தார். இந்த வெற் றிகள் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங் கேற்கும் வாய்ப்பை சத்யன் உறுதி செய்தார். ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் விளையாட அசாந்தா சரத் கமலை தொடர்ந்து சத் யனும் தகுதிப் பெற்றுள்ளார்.

இந்திய வீராங்கனைகள் மோனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோரும் முதல் முறையாக ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளை யாட தகுதிப் பெற்றனர்.

ஒலிம்பிக் கனவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அதிகாரப்பூர்வ மாக தகுதிப்பெற்றுள்ளேன். சிறுவயது முதலே ஒலிம்பிக் கில் விளையாட வேண்டும் என்ற கனவு உண்டு. அந்த கனவு நனவான தருணம் இது. பல ஆண்டுகள் மேற்கொண்ட போராட்டம், தியாகத்திற்கு பலன் கிடைத்துள்ளது.

யூனியன் வங்கி பிற்படுத் தப்பட்டோர் நல சங்கத்தின் ஆலோசகரும், மேனாள் பொதுச்செயலாளருமான ஞா.மலர்க்கொடியின் மகன் சத்யன் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image