நன்னிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம்

நன்னிலம், மார்ச்12- நன்னிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு. - பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. ஜோசியம், ஜாதக மூட நம்பிக்கையால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் குறிப்பாக அண்மையில் நன்னிலத்தில் பெற்ற பிள்ளைகளையே பலியிடும் கொடூரத்தை பெரியார் மண்ணில் அனுமதிக்க முடியாது, திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்களை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்திட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்த லின்படி, திருவாரூர் மாவட்ட திரா விடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் முதல் கூட்டம் 8.3.2021 திங்கள் மாலை 6.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையயம் தந்தைபெரியார் சிலையருகில் மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பிரச்சார கூட்டம் எழுச் சியுடன் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு வரவேற்புரையாற் றினார், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையுரையாற்றினார், 

மண்டலத் தலைவர் ஓவியர் சங்கர், நாகை மாவட்டச் செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா, மாவட்ட விவசாய அணி தலைவர் இரத்தினசாமி ஆகி யோர் முன்னிலை வகித்து உரையாற் றினார்கள். திருமருகல் ஒன்றியத் தலைவர் பொன்.செல்வராசு, கழகப் பேச்சாளர் புலவர் இராவணன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி, கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடக்கவுரையாற்றினர்.

திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

மூட நம்பிக்கையின் விளைவால் நமதுசமுதாயம்பின்னோக்கி செல்வதையும், ஜோசியம், ஜாதக மூடநம்பிக்கையால்பெற்ற பிள்ளைகளையே பலியிடும் கொடூ ரம் இனிமேலும் பெரியார் மண்ணில் நடக்கக்கூடாது, பெற்றோர்கள் நன்கு சிந்தித்து பகுத்தறிவு பெற்ற வர்களாக விளங்கவேண்டும், இந்த விஞ்ஞான காலத்திலும் இதுபோன்ற செயல்களை திராவிடர் கழகம் அனுமதிக்காது. தேர்தல் முடிந்தவு டன் தமிழகம் முழுவதும் மூடநம் பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பிரச்சா ரத்தை மேற்கொண்டு சமுதாயக் கட மையை திராவிடர் கழகம் நிறை வேற்றும் என தனது உரையில் குறிப் பிட்டார்.

ஒன்றிய .. தலைவர் கரிகாலன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய .. செயலாளர் தன்ராஜ், மாவட்ட .. தலைவர் இரா.சிவக்குமார், திரு வாரூர் நகர செயலாளர் இராமலிங்கம், திருவாரூர் நகரத் தலைவர் மனோ கரன், மாவட்ட இளைஞரணி தலை வர் பிளாட்டோ, அச்சுதமங்கலம் கணேசன், குடவாசல் ஒன்றியத் தலைவர் ஜெயராமன், சோழங்கநல் லூர் கவுதமன், தங்கையன், அபிசேக மங்கலம் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் சாமிநாதன், காந்தி மதி,  வடலூர் நகர செயலாளர் குண சேகரன், வருகக்குடி பாலகிருஷ்ணன், பெல் தங்கராசு உள்ளிட்ட ஏராள மான கழகத்தோழர்கள் பெருந்திர ளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நன்னிலம் சுற்று வட்டார பகுதி மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பகுத்தறிவுப் பிரச்சாரத்தை கேட்டு விழிப்புணர்வு பெற்றனர்.

மாவட்ட துணைச்செயலாளர் வீரையன் நன்றி கூறினார்.

தொடர்ந்து குடவாசல், சோழங்க நல்லூர், கொரடாச்சேரி பகுதிகளில் மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பிரச்சார தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்றன.

Comments